என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mobile"
- தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
இந்தியாவில் பிரபல மொபைல் போன் பிராண்ட் ஆக விளங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது சமீப காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒன் பிளஸ் 9 மற்றும் ஒன் பிளஸ் 10 ஆகிய பழைய பிளாக்ஷிப் வேரியண்ட்களை பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் போன்கள் திடீரென எந்த இயக்கமும் ரெஸ்பான்ஸும் இல்லாமல் திரை கருப்பாக மாறி விடுவதாக கூறியுள்ளனர். போன் லேக் ஆவதும் அதிக சூடாவதுமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்திய சாப்வேர் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நடக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது
இந்த நிலையில்தான், பழுதுபட்ட தங்களது ஒன் பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் போன்களை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் ரூ. 42,000 வரை கேட்பதாக பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொகை அந்த மொபைல்களின் விலையை விட அதிகம் ஆகும்.
இந்த மாடல்களை விட மேம்பட்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பழைய மாடல் போன்களின் ரிப்பேர் செலவுக்கே 42,000 ஆயிரம் ருபாய் ஆகும் என்று சர்வீஸ் சென்டர்கள் கூறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
- மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.
இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.
இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
- புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.
நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.
இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.
எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.
- மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி இயக்குவதற்கு, சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும், சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும், வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும், அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும், வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை, வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்கவேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க தகுதியானவர் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம்(அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்கள் வழங்கு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ரெங்கபிரபு(வயது 34). இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியத்தில் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அவருடைய கடையின் ஓடுகள் பிரிந்து கிடப்பதாக அப்பகுதியினர் ரெங்கபிரவுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது புதிய செல்போன்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சர்வீஸ் பார்ப்பதற்காக வந்த செல்போன் மற்றும் சார்ஜர்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரெங்கபிரபு மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், யுவராணி மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூர் -சமயபுரம் சாலையில் உள்ள நங்கமங்கலம் சத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ்(25), மணி மகன் ராஜா(21), தண்டாங்கோரை கீழத்தெருவை சேர்ந்த ராமஜெயம் மகன் கிருஷ்ணன்(20), எசனக்கோரை கீழவீதியைச் சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ்(21), தாளக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் என்பதும், ரெங்கபிரபுவின் செல்போன் கடையில் திருடியது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்