என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mobility"
- பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
- தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.
அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.
வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.
அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.
இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.
- செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
- பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.
இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.
சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.
அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை
(2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
- ஏர்வாடியில் யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் வேண்டுதலுக்காக தர்காவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.
இதை சாதகமாக்கும் வெளிமாநில சமூக விரோதிகளும் பக்தர்கள், மன நோயாளிகள் போர்வையில் தங்கி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தர்கா வளாகத்தில் தனி நபர்களாக ஏராளமான ஆண்கள் வலம் வருகின்ற னர். இவர்களை தர்கா நிர்வாகத்தினர் அடையா ளம் கண்டு விசாரித்து வெளி யேற்றினாலும் பக்தர்கள் போர்வையில் மீண்டும் தர்கா வளாகத்தில் புகுந்து தங்கி வருகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், திருட்டுக்கள் நடந்தும் வழக்கு விசார ணைக்கு பயந்து போலீசா ரிடம் பக்தர்கள் புகார் தெரிவிப்பது கிடையாது.
பிற மாநில போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து ஏர்வாடி யில் தங்கி வந்த பல சமூக விரோதிகளை வெளிமாநில போலீசார் தர்கா வளா கத்தில் ஏற்கனவே பிடித்து சென்றனர். தர்கா நிர்வாகத்தினரின் தீவிர கண்காணிப்பு காரண மாக தற்போது காட்டு பள்ளிவாசல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். ஏர்வாடியில் கூடுதல் போலீ சார் நியமித்து சந்தேகத்திற் குரிய விடுதிகளில் ஆய்வு மேற்கொள்வ துடன், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இலுப்பூரை தலைமை இடமாக கொண்டு 3-வது கல்வி மாவட்டமாக இலுப்பூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசியதாவது:-
அரசு அறிவித்துள்ளபடி அறந்தாங்கி, திருவரங்குளம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய ஒன்றியங்கள் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலும், புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திலும், அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஒன்றியங்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலும் இயங்கும்.
இந்த முறையில் மழலையர் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் இனி ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும். இனி உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் என அழைக்கப்படுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பாடுபட வேண்டும். வருகிற கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நேற்று மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி, சத்தியமூர்த்தி, அறந்தாங்கி திராவிடச்செல்வம், குணசேகரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்