search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money apes"

    • அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ் செய்துள்ளனர்.
    • மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை ராமேசுவ–ரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கினார். நான்காவது நாளான நேற்று முன்தினம் சிவகங்கை நகர் முழுவதும் நடை பயணம் மேற்கொண் டார்.

    அப்போது வீரமாகாளி–யம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற பாதயாத்திரை–யின் போது அங்கு கட்டா–ணிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சாலையோ–ரம் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபுவின் டவுசர் பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பிளே–டால் கிழித்து அபேஸ் செய் துள்ள–னர்.

    இதுகுறித்து பிரபு சிவ–கங்கை நகர் காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புதுவிளக்கு பகு–தியைச் சேர்ந்தவர் முருகே–சன். இவரது மனைவி சுமதி. இவர் மதகுபட்டி பகுதியில் உள்ள கல்லூக்கால் கம்பி தயார் செய்யும் தனியார் கம்பெனி–யில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர் கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    இதுபற்றி மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி சப்-இன்ஸ்பெக் டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மனைவி லட்சுமி. இவர் கடந்த மூன்று மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனும–தித்தனர். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதா–பமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தவமணி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    • திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவர் திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.பின்பு பஸ்ஸில் வெள்ளிமேடு பேட்டைக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் நெல் விற்ற பணம் 51 ஆயிரத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வெள்ளி மேடை ப்பேட்டையில் உள்ள நிலத்திற்கு மண் பாதையில் நடந்து சென்றார்.

    அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ராதாகிருஷ்ணன் யிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார். சோதனையில் போது அவரின் கவனத்தை திசை திருப்பி பையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். மர்ம நபர் சென்ற பின் பையைப் பார்த்தபோது ரூ. 51 ஆயிரம் பணம் காணவில்லை.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் வெளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள்கடந்த சில தினங்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருடப்பட்டது.
    • இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சமுத்திரவள்ளி(வயது48). இவர் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் தனது நகையை அடகு வைத்திருந்தார்.

    நேற்று அந்த நகையை மீட்டுக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் சத்திரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ரூ.7ஆயிரம் ரொக்கமும் இருந்தது. பஸ்சில் யாரோ மர்ம நபர் கட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சமுத்திரவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
    • மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிைலயம் அருகே அன்சாரி (வயது 45) என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். அவர் கடையில் உள்ள ஒவ்வொரு இனிப்புகளின் விலையையும் கேட்டார். பின்னர் அதில் ஒரு இனிப்பை எடுக்க கூறினார்.

    அதற்காக கடை உரிமையாளர் அந்த பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டார். இனிப்பை எடுத்துக் கொண்டு வந்த கடை உரிமையாளர் அந்த மர்ம நபரிடம் கொடுக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர் எனது இருசக்கர வாகனத்தில் பணம் உள்ளது. அதனை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    அந்த மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் கடைக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்தார். அப்போது கடை யில் இருந்த கல்லாப்பெட்டி யை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்தி ருந்த 5 ஆயிரம் ரூபாயை அந்த மர்ம நபர் அபேஸ் செய்து மாயமானதை அறிந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்தார். கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான தடயங்களை வைத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்.

    • ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாககூறி ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் ரூ. 34 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.
    • உதவுவது போல் நடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் கேசவன்(வயது62). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரான இவர் தாதம்பட்டி மந்தையில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்துதருமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர், கேசவனிடம் அவரது ஏ.டி.எம்.கார்டை வாங்கி கொண்டு ஏ.டி.எம்.மையத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர், பணம் வரவில்லை என்று கூறி, வேறொரு ஏ.டி.எம். கார்டை கேசவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அதனை கவனிக்காமல் கேசவன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் பாஸ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது பாஸ் புத்தகத்தை பதிவு செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.34 ஆயிரத்து 481 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    பணம் எடுத்து தருவதாக ஏ.டி.எம்.கார்டை வாங்கி சென்ற வாலிபர், தன்னுடைய கணக்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பதை அறிந்த கேசவன் அதிர்ச்சி அடைந்தார். அதுபற்றி அவர்

    வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) மாயாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கேசவனின் வங்கி கணக்கில் இருந்து நைசாக பணத்தை எடுத்து கொண்டு தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×