search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosquito repellent"

    • வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது.
    • இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே கிடக்கும் கழிவுகளில் கொசுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 நாட்கள் நடைபெறும்
    • பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ேஜாலார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் நேற்று முன்தினம் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.

    அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நிர்மலா சஞ்சய் மற்றும் சுகாதார துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் இணைந்து அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    முன்னால் தலைவர் வட்டம், வி.எம்.வட்டம், வரதராஜ் கவுண்டர் வட்டம், சில்கூர் உள்ளிட்ட அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

    இப்பணி தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தெரிவித்தார்.

    • ஏர்வாடி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். 30 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனர்.

    இந்த பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகரன், சுப்பிரமணியன், ராம்பிரபு, முரளிதரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காங்கயம் நகர பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது.
    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நகரப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ள பகுதிகள், தினசரி மார்க்கெட்டுகள், பஸ் நிலைய வளாகங்கள், கடைவீதி பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தெரு தெருவாக சென்று கொசு மருந்து புகை அடிக்கும் பணிகள் நடைபெற்றது.

    ×