என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mother scold"
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.
இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.
தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பேட் முதல் குறுக்குதெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகன் ராஜ்குமார் (வயது18). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புருசோத்தமன் இறந்து விட்டார். இதையடுத்து ருக்குமணி வீட்டுவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
10-ம்வகுப்பு வரை படித்த ராஜ்குமார் அவ்வப்போது பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
இதனை அவரது தாய் ருக்குமணி கண்டித்தார். இதனால் ராஜ்குமார் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். கோபம் தணிந்த பின் மகன் வீட்டுக்கு வருவான் என்று ருக்குமணி கருதி அவரை தேடவில்லை. நள்ளிரவு ஆகியும் ராஜ்குமார் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ருக்குமணி வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு ருக்குமணி அலறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராஜ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை:
திருபுவனை பாரதியார் வீதியை சேர்ந்தவர் பலராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் திவ்யா (வயது 19).
இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திவ்யா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் திலகவதி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்றும் வீட்டில் திவ்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை திலகவதி கண்டித்ததால் திவ்யா மனவருத்தத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது வீட்டில் இருந்த திவ்யாவை திடீரென காணாமல் திலகவதி அதிர்ச்சி அடைந்தார்.
உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யா இல்லை. இதையடுத்து திலகவதி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள அக்கறைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சரண்யா (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல சரண்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார். மனம் உடைந்த சரண்யா வீட்டில் இருந்த சாணிபவுடரை கலக்கி குடித்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் பம்பு ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயகோபால் (வயது 42).
கூலித்தொழிலாளியான இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், மணிபாலா (வயது 18) என்ற மகனும் உள்ளனர். வள்ளியும் கூலி வேலைக்கு சென்று வருவார். மணி பாலா 8-ம் வகுப்பு படித்து விட்டு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த தீபாவளிக்கு முன்பு சில நாட்களாக மணிபாலா வேலைக்கு செல்லவில்லை.
இதுகுறித்து தாய் வள்ளி மகனிடம் தீபாவளி நெருங்கி வருகிறது. அப்பாவும், நானும் வேலைக்கு சென்று வருகிறோம். நீ மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே? என்று கேட்டுள்ளார். இதனால் தாய் - மகன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மணிபாலா வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தாயிடம் தான் எலிமருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் பதறிப்போன வள்ளி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிபாலா நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்- இன்ஸ் பெக்டர்கள் இனியன், குமார், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது20) இவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் அங்கு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41), டிரைவர். இவருடைய மனைவி அலமேலு. இவர்களுடைய மகன் சிவபாலன் (16). இவர் கடலூரில் உள்ள கங்கனாகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் பள்ளியின் காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றார். தேர்வில் சரியான மதிப்பெண்கள் வாங்காததால் சரவணன் மனைவி அலமேலுவிடம் சிவபாலன் சரியாக படிக்காமல் இருந்து வருகிறான் அவனை ஒழுங்காக படிக்க சொல் என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சிவபாலனை தாய் அலமேலு கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவபாலன் அம்மா திட்டி விட்டதாக கூறி இரவு முழுவதும் வீட்டிலேய நடந்து கொண்டிருந்தான். அப்போது தந்தை சரவணன் ஏன் தூங்க வில்லை, உடல்நலம் சரியில்லையா என்று கேட்டதற்கு சிவபாலன் ஒன்றும் இல்லை என்று கூறி அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டான்.
இன்று காலை தனது மகனை அலமேலு பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிறது சீக்கிரம் எழுந்திரு என்று கூறி தாய் கூப்பிட்டார் . அதற்கு பதில் எதுவும் இல்லாததால் அலமேலு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பேன் கொக்கியில் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாகூர் போலீசில் சரவணன் புகார் தெரிவித்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு திருப்பதி பாலாஜி நகரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் நேற்றும் சசிகுமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லாமல் இப்படி மது குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை யார் கவனிப்பது? அவர்களது படிப்பு செலவுக்கு என்ன செய்வது? என திட்டினார்.
இதனால் மனவேதனை அடைந்த சசிகுமார் நேற்று மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்து மனைவி, மகள்கள் வேகமாக வந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்