என் மலர்
நீங்கள் தேடியது "motor"
- அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
- பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது.
இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீர் நிரம்பிய குளத்தையும், நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தற்சமயம் மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அமைத்து தரப்படும் என்றார்.
ஆய்வின்போது, பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், சிவஅய்யப்பன், பாலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
- அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
இதையடுத்து, திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
இங்கு விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள், சாலையின் இரு மார்க்கத்திலும் உரிய இடங்களில் ரம்பிள் கீற்றுக்கள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, மாணிக்கம்பாளை யம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எச்சரிக்கை
அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஏற்றி இறக்கி செல்லாத பஸ் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.
- தூக்கி வீசப்பட்ட சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று புறப்பட்டார்.
வையகளத்தூர் செல்லும் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அரசு பஸ் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல்சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் பஞ்சாயத்து நல்லம்மாள்புரம் குளக்கரையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான மின்மோட்டார் அறை உள்ளது.
இந்த அறை கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த மின்மோட்டார் மற்றும் வயர்களை திருடி சென்று அருகில் உள்ள மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து உறுப்பினர் அன்னலிங்கம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.