search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muhammad Yunus"

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார்.
    • முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிறது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் வலியுறுத்துவோம். போராட்டம் மற்றும் வன்முறையால் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் தகவலையும் கவனமாக சேகரித்து வருகிறோம். வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாது செய்யப்பட்டது. இதில் டாக்காவில் உள்ள 13 மருத்துவமனைகளும் அடங்கும்.

    இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நடைபெற்ற வன்முறையில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 19931 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக ஷேக் ஹசீனாவை திருப்பு அனுப்பு இந்தியாவிடம் வலியுறுத்தமாட்டோம் என முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார். தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

    • ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
    • முக்கிய துறைகளில் மாற்றம் கொண்டுவர கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை.

    வங்கதேசம் நாட்டிற்கான தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ், தனது நாடு இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது, ஆனால் அது "நியாயம் மற்றும் சமத்துவத்தின்" அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    தொலைக்காட்சியில் உரையாற்றிய முகமது யூனுஸ், "யூனுஸ் நிர்வாக தலைவராக பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் அவரை வாழ்த்தினார்கள்."

    "நாங்கள் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறோம், ஆனால் அந்த உறவுகள் நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கவும் நான் முன்முயற்சி எடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார்.

    சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    வங்கதேசத்தை சீர்திருத்தும் முயற்சியில், தேர்தல் முறை உட்பட ஆறு முக்கிய துறைகளில் மாற்றங்களை கொண்டுவர ஆறு கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக யூனுஸ் கூறினார்.

    • முகமது யூனுஸ் தலைமையில் ஆகஸ்ட் 8-ந்தேதி இடைக்கால அரசு பதவி ஏற்றது.
    • ஏற்கனவே 17 ஆலோசகர் இடம் பிடித்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் இடைக்கால அரசு அமைக்கப்படும் என வங்கதேச ராணுவம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை ராணுவம் அமைத்தது. இடைக்கால அரசில் 17 ஆலோசகர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத், முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார், முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான், லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முகமது யூனுஸ் மற்றும் 13 ஆலோசகர்கள் ஆகஸ்ட் 8-ந்தேதி பதிவி ஏற்றனர். ஆகஸ்ட் 11-ந்தேதி இரண்டு பேர் பதிவி ஏற்றனர். அதற்கு அடுத்தநாள் ஒருவர் பதவி ஏற்றார்.

    • நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம்.
    • பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அரசு கவிழ்ந்தது.

    அதன்பின் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களை தீவைத்து கொளுத்தினர். மைனாரிட்டி இந்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அவாமி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

    ஒரு கட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு கேட்டு இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வன்முறை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றார். பின்னர் "உரிமைகள் அனைவருக்கும் சமமானது. வங்காளதேசத்தில் உள்ள மைனாரிட்டிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    மேலும், நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும். தோல்வியடைந்தால், எங்களை விமர்சியுங்கள் எனத் தெரிவித்தார்.

    • சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல்.
    • அந்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போது நடைபெறும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவந்து, இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைக்கால அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது.

    வங்காளதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சில பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது," என குறிப்பிப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

    • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
    • வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள முகமது யூனுஸ்க்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பேராசிரியர் முகமது யூனுஸ் அவர்களின் புதிய பொறுப்புகளை ஏற்ற அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, இயல்புநிலைக்கு விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நமது இரு நாட்டு மக்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்ததால் இடைக்கால அரசும் அமையும் என ராணுவம் அறிவித்தது.
    • நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.

    சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
    • யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

    வங்காளதேசத்தில் அமைய இருக்கும் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் ஏற்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை "நாட்டின் 2-ம் விடுதலை நாள்" என்று தெரிவித்துள்ள முகமது யூனுஸ் தற்போது, ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ளார்.

    யார் இந்த முகமது யூனுஸ் என்பதை இங்கே காண்போம்.

    83 வயதான முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா அரசின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.

    யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.

    மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதில் அவரது கிராமீன் வங்கி வெற்றி பெற்றதுடன் மற்ற நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு வழி வகுத்தது.

    ஏழை மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறுகடன்களை வழங்குவதில் முன்னோடியாக இருந்த யூனுசுக்கு 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

    இந்த சூழலில் 2008-ல் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு, முகமது யூனுசுக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் தொடங்கின. இதனால் அவர் ஷேக் ஹசீனா அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். 2011-ல் யூனுஸ் கிராமீன் வங்கி இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோசடி வழக்கில் யூனுஸ் மீது வங்காளதேசத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது. எனினும் யூனுஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    • பேராசிரியரான முகமது யூனுஸ் 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
    • முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதனையடுத்து, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) 2006ல் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.

    1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக அவருக்கு இந்தாண்டு தொடக்கத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.

    வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×