search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MUKURTHAKAL"

    • சமத்துவ எருதுகட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு உரிமை யாளர்கள் நலச்சங்கம் சார்பில் 57-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டும் வை பவம் இன்று நடைபெற்றது.

    வருகிற 19-ந் தேதி காலையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகிக்க உள்ளார்.பொக்கனாரேந்தல், பால் கரை , பள்ளபச்சேரி,முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரிய மடை கோவிந்த னேந்தல், அச்சடிபிரம்பு, அம்மன் கோவில், இந்தியா நகர ்(திருப்புல்லாணி), ஆணைகுடி வீரன்வலசை, தெற்குத்தரவை, கொடிக்குளம், வித்தானூர், எல். கருங்குளம், ஆர். காவனூர், இந்திராநகர் (ராம நாதபுரம்), சிவஞான புரம், அரியகுடி புத்தூர், குமுக்கோட்டை, திருவரங்கம் மற்றும் கைக் கோளர்மடம் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப் பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    • அவனியாபுரத்தில் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    • 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி ஜல்லிக் கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ள ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்குமிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டி யின் முக்கிய அம்சமாக விளங்கும் வாடிவாசல் அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகிய இருவரது குடும்பத்தினர் 400 வருடங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதைெயாட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா விமல், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் முத்துப் பாண்டி, வருவாய் அலுவலர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலா, உதவி பொறியாளர் செல்வ விநாயகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், கல்யாணராமன், கல்யாணசுந்தரம், சிவமணி, முனியசாமி, சுந்தர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அவனியாபுரம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    • பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது
    • ஆடி தெய்வ திருமண பெருவிழாவை முன்னிட்டு நடக்கிறது

    கரூர்:

    கரூர் ஸ்ரீமகாஅபிஷேக குழுவின் சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வரும் 24- ந் தேதி ஆடி தெய்வ திருமண பெருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா தொடங்குகிறது.

    கரூர் ஸ்ரீமகாஅபிஷேக குழு நடத்தும் 24-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கும் பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் வரும் 24-நங தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி நாளை (16-ந் தேதி) கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காலை 10 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பாரி போடுதல் வைபவம், தொடர்ந்து முகூர்த்தப்பட்டு எடுத்தல், திருமாங்கல்யம் செய்யக்கொடுத்தல், திருமண விருந்துக்கு மங்களப் பொருட்கள் பெறுதல் நடைபெறுகிறது.

    வரும் 23-ந் தேதி கொடிமர விநாயகருக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோயிலிலிருந்து பெண் வீட்டு சீர் அழைக்க அனைவரும் ஒன்றுக்கூடி மேட்டுத்தெரு அபயபிரதான அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் பசுபதீஸ்வரர் கோயில் திரும்புதல். தொடர்ந்து மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்த்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரணைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியின் முக்கிய நாளான 24-ந் தேதி கரூர் பசுபதீஸ்ரவர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கும் காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் தெய்வ திருமண பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு மொய் சமர்ப்பணம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகாஅபிஷேக குழு தலைவர் ஏ.கே.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் எஸ்.கார்த்திகேயன், பி.ரமேஷ், எம்.செல்வராஜ், என்.பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    ×