search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுபதீஸ்வரர் கோவிலில்  முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
    X

    பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

    • பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது
    • ஆடி தெய்வ திருமண பெருவிழாவை முன்னிட்டு நடக்கிறது

    கரூர்:

    கரூர் ஸ்ரீமகாஅபிஷேக குழுவின் சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வரும் 24- ந் தேதி ஆடி தெய்வ திருமண பெருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா தொடங்குகிறது.

    கரூர் ஸ்ரீமகாஅபிஷேக குழு நடத்தும் 24-ம் ஆண்டு ஆடி தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கும் பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் வரும் 24-நங தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி நாளை (16-ந் தேதி) கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காலை 10 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பாரி போடுதல் வைபவம், தொடர்ந்து முகூர்த்தப்பட்டு எடுத்தல், திருமாங்கல்யம் செய்யக்கொடுத்தல், திருமண விருந்துக்கு மங்களப் பொருட்கள் பெறுதல் நடைபெறுகிறது.

    வரும் 23-ந் தேதி கொடிமர விநாயகருக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோயிலிலிருந்து பெண் வீட்டு சீர் அழைக்க அனைவரும் ஒன்றுக்கூடி மேட்டுத்தெரு அபயபிரதான அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் பசுபதீஸ்வரர் கோயில் திரும்புதல். தொடர்ந்து மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்த்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரணைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியின் முக்கிய நாளான 24-ந் தேதி கரூர் பசுபதீஸ்ரவர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கும் காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் தெய்வ திருமண பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு மொய் சமர்ப்பணம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகாஅபிஷேக குழு தலைவர் ஏ.கே.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் எஸ்.கார்த்திகேயன், பி.ரமேஷ், எம்.செல்வராஜ், என்.பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×