search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulaipari procession"

    • முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி.
    • அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.

    அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.

    பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்

    எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்

    கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்

    கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்

    என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.

    • அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    • சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மின்னொளி அலங்கார தேரில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முன்பு ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். அபிராமம் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான ஜாகிர் உசேன் விழாவிற்கு தலைமை தாங்கி முளைப் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார். விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி, வார்டு கவுன்சிலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கோவில் நிர்வாகி நாகராஜன், மற்றும் அகமுடையார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழா நடந்தது.
    • முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் வளையல்கார தெரு காளியம்மன் கோவில் 51-ம் ஆண்டு உற்சவ வைகாசி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்தி அம்மன் ஊஞ்சல் ஆட்டம், பூச்சொரிதல் விழாவும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. 2-ம்நாள் சுவாமி பெட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி, மாவிளக்கு எடுக்கப்பட்டது. 3-ம்நாள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீச்சட்டி எடுத்தல், பால்குடம், வேல் பூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. 4-ம் நாள் காலை முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. பூஜை ஏற்பாடுகளை பூசாரி பொன் பாண்டி செய்தார்.

    • நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று இரவு 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்து உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மேலக்கரந்தை சந்தன செல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    கலை நிகழ்ச்சிகள்

    விழாவையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு நடைதிறப்பும், காலை 9 மணிக்கு காலை பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6 மணிக்கு கோவில் முன்பு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை யும், மாலை 5 மணிக்கு பெண்கள் ஊர்வலம் நடைபெற்றது.

    அக்னிசட்டி ஊர்வலம்

    இதைத்தொடர்ந்து பூச்சட்டிகள் 21 அக்னிசட்டி, 51 அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடை யின் கீழ் வீற்றிருக்கும் தங்க குடம் வாலி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக் கோளத்துடன் வீதி விழா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படி தாரர்கள் சார்பில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று அதிகாலையில் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க முளைப்பாரி ஊர்வலத் துடன், மேள தாளத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று இரவு 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்து உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மேலக்கரந்தை சந்தன செல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.

    • இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • புனித நீர் வழிபாடுடன் துவங்கி மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கேரள செண்டை மேளம், நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலம் முக்கிய ரோடுகளின் வழியாக கூப்பிடு பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுடன் துவங்கி இரவு 7:45 மணி அளவில் மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கூப்பிடு பிள்ளையார் காவடிக் குழுவினரின் காவடியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    • வாடிப்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், த.மா.கா வட்டாரத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் வ.உ.சி. 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். யூனியன் ஆபீஸ் பிரிவிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், ஆட்டோ நிறுத்தம் வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி. சிலை முன்பு முளைப்பாரி வைத்து வழிபாடு செய்தனர்.

    சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் பொன்னையா, பாபநாச மாரியப்பன், நாகமுத்து ராஜா, விக்கி ராம்மோகன் முன்னிலை வைத்தனர். செயலாளர் செந்தில் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, த.மா.கா வட்டாரத் தலைவர் பாலசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சந்தனபாண்டி நன்றி கூறினார்.

    ×