search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipality meeting"

    • கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்தது.
    • மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் பூங்கொடி முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் துணைத் தலைவர் முருகேசன் பேசுகையில், மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே வரும் காலங்களில் அஜந்தா தயாரிக்கும் போது அதனை வார்டு கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது அலி, யாசருக்கான், அலி அக்பர், சுந்தர மகாலிங்கம், சுபா ராஜேந்திர பிரசாத் மாரி, முருகன், முகைதீன் கனி, சங்கரநாராயணன், அரபா வஹாப் ஆகியோர் பேசினர்.

    • கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.
    • ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் மு.மத்தீன் தலைமையில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. உடுமலை நகராட்சிப்பகுதிகளில் நகராட்சி மூலம் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு ஏரிப்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென இணைப்புகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணைத்தலைவர் கலைராஜன் பேசியதாவது:- ஒன்றுக்கும் மேற்பட்ட சிறிய கடைகள் கட்டி வாடகைக்கு விடும்போது தனித்தனியாக மின் இணைப்பு பெறப்படுகிறது. அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. ஆனால் ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    அதுபோல பின்னால் ஒரு வீடு ,முன்புறம் சிறு கடை இருந்தாலும் தனித் தனியாக வரி விதிக்கப்படுகிறது. இது பொதுமக்களை கசக்கிப் பிழியும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கழிவறை மற்றும் குளியலறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாதாள சாக்கடைக்கான வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் கலைவாணி, விஜயலட்சுமி, ஆறுச்சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.

    • நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலக்கோட்டை - திண்டுக்கல் சாலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்கவும், கோட்டை, நேருநகர், துரைச்சாமிபுரம், மணியாரம்பட்டி மற்றும் 1 முதல் 15 வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் என ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி சீமை கருவேலமரங்களை முற்றிலுமாக அகற்ற தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சடகோபி மற்றும் ஒன்றிய பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×