என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Muslim women"
- சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
- தச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [1986] விஞ்ச முடியாது.
விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார். மாதா மாதம் பெண்களுக்கு 8,500 ரூபாய் அவர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரபிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ஏராளமான முஸ்லீம் பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் 1 லட்ச ரூபாய்க்கான கேரண்டி கார்டு உடன் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உத்தரவாத அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு ரசீது கிடைத்ததாக சில பெண்கள் தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் 1 லட்சம் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது இந்தியா கூட்டணி வென்றுள்ளதால், இந்த உத்தரவாத அட்டையை சமர்ப்பிக்க வந்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என தங்களது மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூதிகளுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையால் பெண்களின் சமஉரிமையும், கண்ணியமும் கேள்விக்குள்ளாவதாக குறிப்பிட்டார்.
முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னர் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கோர்ட் எடுக்கும் முடிவுக்கு அரசு கட்டுப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருந்தனர். ஒரு நீதிபதி மட்டும் எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது.
பின்னர், மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த பலர் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்தினர். மேலும், இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் இருமுடியுடன் வந்த பல பெண்களை மிரட்டி, திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.)
இப்படி, சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போனதை இன்று சூசகமாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாக’ தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்