என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naomi Osaka"
- கோகோ காஃப் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.
- பெகுலா 6-1, 7(7)-6(4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரேலை எதிர்கொண்டார். இதில் கோகோ காஃப் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா பிரான்ஸ் வீராங்கனை டயான் பாரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பெகுலா 6-1 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பாரி கடும் நெருக்கடி கொடுத்ததால் இந்த செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் பெகுலா 7(7)-6(4) என 2-வது செட்டையும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.
ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா கஜகஜஸ்தான் வீராங்கனை புடின்ட்சேவாவை 3-6, 6-4, 6-2 என வீழ்த்தினார்.
- முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
- 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி அதை 6-2 எனக் கைப்பற்றினார்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. ஒரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியியை எதிர்கொண்டார்.
இதில் 6-3, 6-2 என நேர்செட்டில் கணக்கில நவோமி ஒசாகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் பெண்கள் ஒற்றையர்கள் பிரிவில் மின்னென், டொமோவா, சீனாவின் வாங் ஷின்யு உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.
- பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என ஒசாகா அறிவித்தார்.
டோக்கியோ:
ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஆவார். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.
இந்நிலையில், நவோமி ஒசாகா தனது பெல்ஜிய பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெல்ஜிய பயிற்சியாளருடன் பணிபுரிந்தபோது 2020 அமெரிக்க ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இதுதொடர்பாக, நவோமி ஒசாகா தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், 4 ஆண்டுகள், 2 ஸ்லாம்கள் மற்றும் நிறைய நினைவுகள். ஒரு சிறந்த பயிற்சியாளராகவும் இன்னும் சிறந்த நபராகவும் இருப்பதற்கு நன்றி விம், உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ஒசாகாவும், பிசெட்டும் பிரிவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
- கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.
இரண்டு ஆண்டுகள் கழித்து நவாமி ஒசாகா அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கினார். ஜெலனா ஒஸ்டாபென்கோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நவாமி இந்த போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
நியான் கிரீன் நிற ஆடை அணிந்து களத்திற்குள் என்ட்ரி கொடுத்த நவாமி போட்டி துவங்குவதற்கு முன்பே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமான டென்னிஸ் ஆடையை சற்று மறு வடிவமைப்பு செய்த நவோமா, ஜாக்கெட்-ஐ அலங்கரித்து அணிந்திருந்தார். இத்துடன் கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.
இவர் அணிந்திருந்த ஆடையை பின்புறம் இருந்து பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜாக்கெட்டில் நீண்ட டை இணைக்கப்பட்டு இருந்தது. இதே போல் கால் சட்டையில் சிறு சிறு மடிப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்தன. தனது ஆடை போட்டியில் எந்த இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்ட நவாமி வெற்றி வாகை சூடினார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானின் நவாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் நவாமி ஒசாகா, அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆஷ்லின் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜப்பானின் நவாமி ஒசாகா சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.
இதில் நவாமி ஒசாகா 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை முதல் சுற்றில் வென்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, பிரான்சின் டயான் பாரியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஒசாக 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை பாரி 1-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில், 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற நவாமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நவாமி ஒசாகா, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் ஒசாகா.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்குடன் மோதினார்.
இதில் நவாமி ஒசாகா 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், செக் வீராங்கனை சினியா கோவாவை சந்திக்கிறார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 7-6 (7-1), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று ஒசாகாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.
இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.
இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்