என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Natural Gas"
- சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது.
- டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப் படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ.தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டாலும் 5.68 கி.மீ. இதுவரை இயக்கப்படுகிறது.
டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கி னால் 'மைலேஜ்' கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்ந்த செயல்பாடு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாயுவுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இயற்கை எரிவாயு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்படும். மேலும் டீசலினால் ஏற்படும் காற்று மாசுவை விட இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் மிக குறைவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வல்லத்தில் உள்ள ஒரு நிலையத்தில் இருந்து தையூரில் உள்ள டிகம்பிரசிங் சிஸ்டம் யூனிட்டுக்கும் பின்னர் அடுக்குமாடி வீடுகளுக்கும் கியாஸ் வருகிறது.
- குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பை பெற பதிவு கட்டணம் ரூ.354 ஆகும்.
சென்னை:
வீடுகளுக்கு சமையல் கியாஸ் குழாய் மூலம் வினியோகம் செய்யும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையை ஒட்டியுள்ள தகவல் தொழில்நுட்ப பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சமையல் கியாஸ் குழாய் பதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கேளம்பாக்கம்- நாவலூர் இடையே இயற்கை கியாஸ் குழாய்களை அமைத்துள்ளது. படூர் அருகே உள்ள 1,200 அடுக்குமாடி குடியிருப்புகள் இணைப்புகளை பெற்றுள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் சமையல் கியாஸ் இனி கிடைக்கும். வழக்கமான எல்.பி.ஜி. கியாஸ் அல்ல. குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.
சுமார் 4,500 குடியிருப்புகள் இணைப்புக்காக ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 மாதங்களாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
வல்லத்தில் உள்ள ஒரு நிலையத்தில் இருந்து தையூரில் உள்ள டிகம்பிரசிங் சிஸ்டம் யூனிட்டுக்கும் பின்னர் அடுக்குமாடி வீடுகளுக்கும் கியாஸ் வருகிறது.
தையூர் அலையன்ஸ் நகர்ப்புற வளாகத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பழைய மகாபலிபுரம் உள்ளது. அதன் உட்புற சாலைகளில் 25 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பை பெற பதிவு கட்டணம் ரூ.354 ஆகும். மேலும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.750-ம் உபகரண பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.6000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஒரே தடவையாகயாகவோ அல்லது தவணையாகவோ செலுத்தலாம். ஓ.எம்.ஆர். குடியிருப்பு வாசிகள் ஏஜென்சியின் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் இணைப்பை பெறலாம்.
இதுகுறித்து ஏ.ஜி. அண்டு பி பிரதம் திருக்குமரன் கூறுகையில், 'சமையல் பயன்பாட்டு கட்டணத்தை தீர்மானிக்க பயன்பாடு அளவிடப்படும். எல்.பி.ஜியை விட இயற்கை எரிவாயு பாதுகாப்பானது என்பதால் மக்கள் பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகளை இணைப்பதையும் செய்து வருகிறோம். வல்லம் அருகே 140 தனி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். 90 நாட்களுக்குள் ஐ.டி. பகுதியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடியும் என்றார்.
ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களில் 700 கி.மீ. தூரத்திற்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வலையமைப்பு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
- இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
- கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சென்னை:
பொதுத்துறை எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்.என்.ஜி. எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ எரிவாயு வருகிறது. இந்த எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இயற்கை எரிவாயுவை வீடுகளுக்கு வினியோகம் செய்ய பதிவுகள் நடந்து வருகிறது. இதற்கு டெபாசிட் கட்டணமாக ரூ.6,000, முன்பணமாக ரூ.500, இணைப்பு கட்டணமாக ரூ.590 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.6,500 திரும்ப பெறும் கட்டணம் ஆகும்.
இந்நிலையில் முதல்முறையாக சென்னை அண்ணாநகர் அருகில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 50 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயற்கை எரிவாயு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை எரிவாயு எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. முதல் பில் இந்த மாத இறுதியில் வரும் என்று இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இயற்கை எரிவாயுவில் இயங்கும் பயணிகள் பேருந்து முதன் முறையாக திருப்பூரில் ஓட உள்ளது பெரும் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
- தனி நபர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 450 முதல் 1200 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கலாம்.
திருப்பூர் :
மக்கள் தொகை பெருக்கம், மழைக்காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பருவநிலை மாறுதல் ஏற்பட்டு காலம் தவறிய மழை, எல்நினோ, டைபூன், அதீத வறட்சி போன்றவை உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிக கார்பன் உமிழ்வால் ஆர்டிக், அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டம் உயர்வு போன்றவற்றால் பெரும் பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதில் பல்லாயிரம் கோடி இழப்புகளும், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவுகள் நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் மக்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை தனிநபர் ஒருவராக இயக்குவதை விட பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் தனி நபர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 450 முதல் 1200 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கலாம்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள்:
இதில் தற்போது அடுத்த கட்டமாக டீசல் பயன்பாட்டில் இருந்து எல்.பி.ஜி., சி.என்.ஜி., எனப்படும் எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தினால் மேலும் கார்பன் உமிழ்வை தடுக்கலாம் என பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
தற்போது இதில் அடுத்த வருங்கால தொழில் நுட்பமாக மின்சார வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தற்போது பெரிய நகரங்களில் மின்சாரத்தின் மூலம் பேட்டரிகளில் இயங்கும் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
இது கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது அடுத்த கட்ட தொழில்நுட்ப பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் கார்பன் உமிழ்வே இல்லாத ஒன்று எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் கூட தற்போது இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் சந்தையில் வந்து விட்டன. ஆனால் பயணிகள் பேருந்துகளில் இத்தொழில்நுட்பம் இன்னும் பரவலாக புழக்கத்துக்கு வரவில்லை. இந்நிலையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில் இளைஞரின் எண்ணத்தில் பதிந்ததின் விளைவாக முதல் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பயணிகள் பேருந்து முதன் முறையாக திருப்பூரில் ஓட உள்ளது பெரும் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
பல்லடம் இளைஞரின் புதிய முயற்சி:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கோகுல்நாத். இவரது குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு பாதிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கம் ஆகியவற்றால் பேருந்து சேவை தொழிலானது நஷ்டமடைந்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகளின் சேவையில் பிரதான செலவாக உள்ள டீசல் செலவை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் பேருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் சிஎன்ஜி முறையில் ஓடக்கூடிய புதிய பேருந்து ஒன்றினை தயார் செய்ய கோகுல் நாத் முயற்சி எடுத்துள்ளார்.
இந்த பேருந்தில் சிஎன்ஜி. எரிவாயுவை நிரப்பும் வகையில் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு, குறிப்பாக காசு மாற்றினை குறைக்கும் வகையில் முற்றிலும் புகையே வெளியேறாத வகையில் இந்த பேருந்தானது அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேருந்து உரிமையாளர் கூறுகையில், டீசல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு பாதிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கம் ஆகியவற்றால் பேருந்து சேவை தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.
இதன் காரணமாக பேருந்திற்கான பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் யோசனை செய்து இந்த புதிய முறையை ஏற்பாடு செய்துள்ளோம். அதனடிப்படையில் அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான சிஎன்ஜி., எனப்படும் இயற்கை எரிவாயுவை நிரப்ப நான்கு கொள்கலன்களை அமைத்துள்ளோம்.
மேலும் எரிவாயுவை வேகமாக நிரப்ப கூடிய வகையில் வடிவமைப்பை அமைத்துள்ளதாகவும், 90 கிலோ சிஎன்ஜி. கேஸ் நிரப்பலாம். இது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பேருந்தில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவும், டீசலும் லிட்டர் அளவில் விலை வேறுபாடு 40 ரூபாய் அளவில் வருகிறது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் முக்கிய பிரச்சினையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் புகை என்பது அறவே பேருந்தில் இருந்து வராது எனவும், சோதனை அடிப்படையில் தாங்கள் பேருந்தை இயக்கி பார்த்த போது, வேகம் மற்றும் இழுவை என்பது எந்த மாற்றமும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
எரிவாயு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் அதே நேரத்தில் இயற்கையை பாதிக்காமல் இருக்கும் இந்த வகையான பேருந்துகள் தயார் செய்வதில் அரசு கவனம் செலுத்துவதுடன், அரசு பேருந்துகளும் இதே போன்ற முறையை ஏற்படுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.
இன்னும் பேருந்து பயணிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் இப்படியான ஒரு பேருந்து வர உள்ளது என்பது பொது மக்களிடமும், மற்ற தனியார் பேருந்து இயக்கும் நிறுவனங்களால் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இப்பேருந்து வெற்றிகரமாக இயங்கினால் இதை பார்த்து மேலும் சில தனியார் பேருந்துகள் இயற்கை எரிவாயுக்கு மாறினால் அது உலக மக்களுக்கு நன்மையாக முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- 2012-ம் ஆண்டில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினால் அமைக்கப்பட்ட துரப்பணக் கிணற்றில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக மேற்கண்ட துரப்பணக் கிணறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் 2013-ம் ஆண்டிலேயே அப்போதுள்ள கருவிகளுடன் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
- இக்கிணற்றிைன தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் மூடிட மாவட்ட நிர்வாகத்தினரிடம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், சேந்த மங்கலம் வருவாய் கிராமம், பெரியகுடி உட்கிராமத்தில் 2012-ம் ஆண்டில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினால் அமைக்கப்பட்ட துரப்பணக் கிணற்றில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக மேற்கண்ட துரப்பணக் கிணறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் 2013-ம் ஆண்டிலேயே அப்போதுள்ள கருவிகளுடன் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
இக்கிணற்றிைன தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் மூடிட மாவட்ட நிர்வாகத்தினரிடம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. அதிக அழுத்தத்தினால் உள்ள இக்கிணற்றினை பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் பேரழிவு ஏற்படாமல் மூடிட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றபின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இக்கிணற்றில் வேறு எவ்வித பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக்கழகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.
பெர்லின்:
ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.
மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ராமநாதபுரம்
தமிழ்நாட்டில் குழாய் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயுவை எளிதாக வழங்க ஏ.ஜி. அண்ட் பி. பிரதாம் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடியில் 3 துணை பூஸ்டர் எரிவாயு நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை எரிவாயு தேவை அதிகரித்து வருவதால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி உள்பட பல்வேறு இடங்களில் மேலும் நிலையங்களை தொடங்க இலக்கு வைத்துள்ளது.
24 மணி நேர இயற்கை எரிவாயு விநியோகத்தை ராமநாதபுரம், பட்டணம்காத்தான், ராமேசுவரம் பகுதிகளில் எரிவாயு கட்டங்களை நிறுவி மார்ச் 2023-க்குள் 15 ஆயிரம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு என்ற இலக்குடன் உள்கட்டமைப்பு பணிகளில் செயல்படுகிறது.
இந்த விரிவான திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி ஆகிய பகுதிகளில் இந்த நிதியாண்டில் 3 துணை பூஸ்டர் நிரப்பும் நிலையங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.
பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன் நெட்வொர்க்குகள் மூலம் இந்த பகுதிகளில் பி.என்.ஜி. சேவையை தொடங்க உள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் 11 எரிவாயு நிரப்பு நிலையங்களை தொடங்குவதன் மூலம் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு பி.என்.ஜி. விநியோகத்தை உறுதி செய்யும் என ஏ.ஜி. அண்ட் பி.பிரதாம் மண்டலத் தலைவர் பூமாரி தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு வரம்புக்குள் மண்எண்ணெய், நாப்தா, சமையல் எரிவாயு ஆகியவை உள்ளன.
பிற பெட்ரோலியப் பொருட்களான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஏ.டி.எப். என்னும் விமான எரிபொருள், பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு, சேவை வரி விதிப்புக்கு வெளியே வைக்கப்பட்டு உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிற நிலையில், அவற்றையும் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ், சோதனை அடிப்படையில் இயற்கை எரி வாயுவை கொண்டு வருவது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக, அந்த கவுன்சிலின் இணைச்செயலாளர் தீரஜ் ரஸ்தோகி தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஏ.டி.எப். என்னும் விமான எரிபொருளையும் சரக்கு, சேவை வரி வரம்பின்கீழ் 5 பெட்ரோலியப் பொருட்களுடன் கொண்டு வர முடியும்” என தெரிவித்தார்.
அதே நேரத்தில் இதற்கான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடவில்லை. #GST #GSTCouncil
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்