என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naveen Patnaik"
- காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது தாக்குதல்.
- மேலும் பெண்ணுக்கு எதிராக அதிகாரிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது கடையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளனர். அதுவும் இல்லாமல் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். தன்னுடைய ஜாக்கெட், பிரா ஆகியவற்றை கழற்றிய பிறகு, ஆண் அதிகாரி ஒருவர் மார்பில் உதைத்ததாக பெண் குற்றம்சாட்டினார். மேலும், இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை தேவை என ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:-
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் நடந்ததை நாம் கேட்டிருப்போம். இருவரும் தாக்கப்பட்டது மற்றும் ராணுவ அதிகாரி வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டு மிகமிக அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒடிசா மாநிலத்தில் பாஜக-வின் திறமையின்மைமைய இந்த சம்பவம் காட்டுகிறது.
இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- ஒடிசா கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
- ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பிறகு இன்று சட்டசபை கூடியது. ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உரையுடன் சட்டசபை தொடங்கியது. அப்போது கவர்னரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து பிஜு தனதா தளம் கட்சியினர் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராம சந்திர கதம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸின் மகன் லலித் தாஸ் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், "அரசு அதிகாரி மீது வன்முறையில் ஈடுபட்ட கவர்னரின் மகன் மீது பாஜக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா கவர்னரின் மகன் லலித் குமார் தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை பொறுப்பு அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பாண்டியன் கட்சியை பிளவுப்படுத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
- மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் பட்நாயக் உறுதி அளித்ததாக செய்தி வெளியானது.
ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பாண்டியன் முக்கிய காரணம் என பிஜு ஜனத தளம் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையே கட்சியை பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலங்களவையில் பாஜவு-க்கு ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாண்டியன் குறித்த தகவல் முற்றிலும் பொய் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில் "இது முற்றிலும் பொய், அவதூறு, விளைவை ஏற்படுத்தக்கூடியது. நான் முன்னதாக கூறியதுபோல் அதிகாரியாக பணியாற்றிய போதும், கட்சியில் பணியாற்றியபோதும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றியுள்ளார். அதற்காகவே அறியப்பட்டவர். மதிக்கப்படுகிறார். பாண்டியனுடன் விசயத்தில் அவரை வைத்து விளையாட வேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கேட்டுக்கொள்கிறேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே பிஜு ஜனதா தளம் மாநிலங்களவையில் பாஜக-வுக்கு ஆதரவு கொடுக்கும் என அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக துணைத்தலைவர் பிரஞ்சி நாராயன் திரிபாதி "பாஜக பிஜு ஜனதா தளத்திடம் இருந்து உதவி கேட்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் மெஜாரிட்டி உள்ளது" என்றார்.
- இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை.
- பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
மக்களவை தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. அந்த கட்சிக்கு 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்திய நாடாளுமன்றம் மக்களவை இன்று கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். ஜூன் 27-ந்தேதி மாநிலங்களவை கூட இருக்கிறது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது கட்சி மாநிலங்களவை எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் கடுமையான வகையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சிக்கான மாநிலங்களவை எம்.பி. தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:-
இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடி சுரங்க ராயல்டி ஒடிசாவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ராயல்டி கிடைக்கும் வகையில் கோரிக்கை வைப்போம். இதன் காரணமாக எங்கள் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையான பங்கு குறைக்கப்பட்டு மக்கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஒடிசா மாநிலத்திற்கான நலனை காப்பாற்றுவதற்கான எந்த எல்லை வரையும் செல்வோம். பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒடிசாவின் நலம் புறக்கணிக்கப்பட்டால் கடுமையான வகையில் எதிர்க்க வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்தனியாக போட்டியிட்டு வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்து ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
- பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
- முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.
சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மோகன் சரண் மாஜி 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- துணை முதல் மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புவனேஸ்வர்:
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன.
இதில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இதற்கிடையே, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சட்டசபையில் கட்சியின் தலைமை கொறடாவாக இவர் செயல்பட்டுள்ளார். துணை முதல் மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று மாலை பதவியேகிறார்.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை மோகன் மாஜி சந்தித்தார். அப்போது, பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
- நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
- நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என்று இந்த சர்ச்சைகளுக்கு ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் பேசிய அவர், "எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, வி.கே. பாண்டியன் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், "நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு என்மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்திருந்தால் தொண்டர்கள் அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்" என்று அவர் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், சமீபத்தில் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் வி.கே.பாண்டியன் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்.
கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.
கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது.
தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்தேன் என தெரிவித்தார்.
ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், சமீபத்தில் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
பாராளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கி, கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியை பிடித்து முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார்.
தற்போது 77 வயதாகும் நவீன் பட்நாயக், 2024-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 6-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து ஒடிசாவின் அடுத்த முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில கவர்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
- நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டது.
- 2000-த்தில் இருந்து நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறார்
ஒடிசா மாநிலத்தில் மே 13-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாளை வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. இந்த நிலையில் சட்டசபையை கலைக்க கவர்னருக்க அம்மாநில மந்திரிசபை பரிந்துரை செய்துளள்து.
பிஜு ஜனதா தளம் அரசின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்துள்ளது.
நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 2000-த்தில் இருந்து நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறர். ஐந்து முறை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலமைப்பின்படி தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டசபையை கலைக்க மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள்.
- வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை.
புவனேஸ்வரம்:
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதாதளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.
ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை குறிவைத்தே ஒடிசாவில் பா.ஜ.க. பிரசாரம் செய்தது.
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. அங்கு பிரசாரம் செய்தது. அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக வி.கே.பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே பா.ஜ.க.வின் பிரசாரமாக இருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறியதாவது:-
ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் வி.கே.பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது அபத்த
மானது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வி.கே.பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சிலர் கூறுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
என்ன ஒரு முட்டாள்தனமான பேச்சு. ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் தேர்தலில் கூட இதுவரை போட்டியிட்டது இல்லை.
ஒடிசாவிலும் சரி, நாடு முழுவதும் சரி, பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த பா.ஜ.க.வினர் இதுபோல பேசி வருகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
எனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள். இதை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இவை எல்லாம் இயல்பாகவே நடக்கும். இத்தனை காலம் இந்த கட்சி எப்படி மக்களுக்கு சேவை செய்து வந்ததோ, அதுபோல வரும் காலத்திலும் தொடர்ந்து தானாகவே நடக்கும்.
இந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிச்சயமாக நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. இதுவரை நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன். வரும் காலத்திலும் இதையே நான் தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
- தேர்தலின்போது பிரதமர் மோடி நவீன் பட்நாயக்கின் உடல்நலம் குறித்து பேசினார்.
ஒடிசாவில் பா.ஜனதாவும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் இணைந்து போட்டியிடுவதாக முடிவு செய்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது.
ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கிற்கு வயதாகிவிட்டது. வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என அவருடைய உடல் நலம் குறித்து பிரசார கூட்டங்களில் பேசினார்.
அதற்கு நவீன் பட்நாயக், தான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன் என பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வாக்கிற்காக தனது உடல் நலம் குறித்து பேசியது துரதிருஷ்டவசமானது என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறுகையில் "மோடி வாக்குகளை பெறுவதற்காக எனது உடல் நலம் குறித்து பேசியது துரதிருஷ்டவசமானது. என்னை அவருடைய சிறந்த நண்பர் என பிரதமர் சொல்கிறார். அப்படி என்றால் டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொள்ள முடியாதா?. அதற்குப் பதிலாக வாக்குகளை பெற தேர்தல் பேரணி கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்