search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Exemption"

    • நீட் தேர்வின் முறைகேடுகள் நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.
    • 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவேண்டும்.

    மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதன் விவரம் பின்வருமாறு:-

    மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்

    இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள் நீட தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-6-2024 அன்று. நீட் தேர்வு முறையை இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்றும், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

    • எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி அறிவுறுத்தலின் படி ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், நகர துணை செயலாளர் ஆ.சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், நகர பொருளாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் சந்தை கோடியூர் பகுதியில் நீட் தேர்வு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வ.வடிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ், சி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் காளியப்பன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலருமான கே.சம்பத் ராஜா வரவேற் றார்.

    மாவட்ட தி.மு.க. செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் எம்.ஆசிக் அமீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத் தப்பட்டோர் நலன் மற்றும் கதர் வாரியத்துறை அமைச் சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பி.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெ.ஜெய–ரஞ்சன் கருத்துரை வழங்கி னார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். விளை யாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராம நாதபுரம் 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, சன் சம்பத்குமார், ஆர்.எஸ்.சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.ஸ்டாலின், என்.பொன் மணி, சங்கர், எம்.வசந்த்,

    ஆர்.சண்முகப்பிரியா,ப.சம்பத்குமார், மருத்துவர் அணி துணை அமைப்பா ளர்கள் தி.சந்திரமோகன் வா.எபினேசர், செல்வராஜ், எம்.எம்.கார்த்திக், பா.சர வணபாலன், வே.சேகர், சி.கணேசன், த.கார்த்திகே யன், ந.மதிவாணன் வ.மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
    • மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது.

    சேலம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் சொன்னார். ஆனால் மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது. நெல்லையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பா.ஜ.க பிரசார அலுவலகம் போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது.

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கை கொண்டுவர வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறி சொகுசு பயணமாக சென்று கொண்டிருக்கிறார். அதனால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×