என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "new bus"
- முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
- வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் சாரநாத் நகர், தைக்கால் தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
இந்த புதிய பஸ் சேவையை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உடன் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், கும்பகோணம் போக்குவரத்து கோட்ட மேளாலர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி, கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- புதிய பஸ்சை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் என்ற கிராமம் கமுதி-சாயல்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாண வர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
கிராமத்தின் விலக்கு சாலையில் இறங்கி 5 கிமீ தூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய நகர பஸ் வசதி ஏற்படுத்தி தரப் பட்டது.
தங்களது கிராமத்திற்கு வந்த இந்த புதிய பஸ்சை கிராம பொதுமக்கள் குலவையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்சை தொட்டு வணங்கி கைகளை கூப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித் தனர்.
முன்னதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான பாண்டி, புதிய பஸ்சை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் நடத்துனர், தொழிற்சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.
- புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.
மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
- புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அதிகமான மாணவி, மாணவர்கள் செல்கின்றனர்.
- புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடி சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அதிகமான மாணவி, மாணவர்கள் செல்கின்றனர்.
இதனால் 8 மணி முதல் 8.30 வரை 3 பேருந்துகள் ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடி சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர்.
எனவே புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு பஸ் இயக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனால் கூடுதல் பஸ் இயக்கக்கோரி புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம், ரெடிமேட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் புதிய பஸ் இயக்கும்படி அரசு போக்கு வரத்து கழகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ. இடமும் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் செய்தி பிரசுரம் ஆகி இருந்தது. இதனையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று காலை புதிய நகரப் பேருந்தை புதியம்புத்தூரில் இருந்து இயக்க ஏற்பாடு செய்தனர்.
புதிய பஸ் இயக்கும் நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்செல்வி குழந்தை வேல், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலை வர் வேலாயுதசாமி, புதியம் புத்தூர் ரெடிமேட் உற்பத்தி யாளர் சங்கச் செயலாளர் கண்ணன், தி.மு.க. வர்த்தக அணி முத்துக்குமார், சம் லிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, ரவி ஜெயபிரகாஷ், முத்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 82 பஸ்கள் உள்பட 555 புதிய பஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் விழுப்புரம் மண்டலத்திற்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 பஸ்கள் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 11 புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை- சேலம், கள்ளக்குறிச்சி- சென்னை, சேலம்- சென்னை, திருவண்ணாமலை- சென்னை, புதுச்சேரி- சென்னை ஆகிய வழித்தடங்களில் 11 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் சுப்பிர மணியன், ஏழுமலை எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் கணேசன், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், முருகதாஸ், சுந்தர்ராஜன், கோட்ட மேலாளர் துரைசாமி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பேரவை இணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய பஸ்கள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 19 பஸ்களும், ராமநாத புரம் மாவட்டத்திற்கு 12 பஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும், ராமேசுவரம் - மதுரை வழித்தடத்தில் 2 பஸ்களும், ராமேசுவரம்- திருப்பூர், முதுகுளத்தூர்- கோவை, முதுகுளத்தூர் - மதுரை, பரமக்குடி - சிதம்பரம், பரமக்குடி - மதுரை, ஏர்வாடி - குமுளி, ஏர்வாடி - ஈரோடு ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பஸ் வீதம் மொத்தம் 12 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் கோமதி செல்வகுமார், கோட்ட மேலாளர்கள் சிவலிங்கம், சரவணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தெய்வேந்திரன், பாலமுருகன், தமிழ்மாறன், ரவி, இருளப்பன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாநிலம் முழுவதும் நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் பஸ்களை தமிழக அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை கொண்டு அரசு பயணிகள் பஸ்சை இயக்குவதில் எந்த தவறும் இல்லை. இந்த பஸ் இடைவெளியில் நிற்காமல் செல்வதால், நடத்துனர் தேவையில்லை. ஒருவேளை பஸ்சை நிறுத்த வேண்டும் என்றால், பயணிகள் பயன்படுத்தும் விதமாக ‘பெல்’ பஸ்சில் பொருத்தப்பட்டுள்ளது. அதை அழுத்தி, பஸ்சை பயணிகள் நிறுத்தலாம்.
தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 555 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 1.75 கோடி பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 227 நடத்துனர் இல்லாமல் பஸ்சை இயக்கக்கூடாது என்று கூறினாலும், மோட்டார் வாகன விதி 38, ஓட்டுனருக்கு அந்த பொறுப்பை வழங்க வழி வகை செய்கிறது. இந்த விதியின்படி, நடத்துனர் பணியை ஓட்டுனர் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இப்போதெல்லாம் பயணிகள் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ பஸ்களைத் தான் விரும்புகின்றனர். அவர்கள் பஸ்சில் ஏறும் இடத்திலேயே டிக்கெட் எடுத்து விடுகின்றனர். இடைவழியில் நிற்காமல் பஸ் செல்வதால், பயணம் நேரம் குறைகிறது. தற்போது நடத்துனர் இல்லாமல் ஓட்டுனரை மட்டும் கொண்டு, தமிழகம் முழுவதும் 256 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுபோல ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் பஸ்கள், மராட்டியம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. இந்த முறையை பின்பற்றுவதால், ஓட்டுனருக்கு தேவையில்லாமல் மன அழுத்தம் ஏற்படும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
எதிர்காலத்தில் இதுபோன்ற பஸ்களில், திடீரென நடுவழியில் பழுது ஏற்பட்டால் அதை கண்காணித்து உடனே ஊழியர்களை அனுப்பி சரிசெய்யவும், அவை எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்கவும், ஒவ்வொரு பஸ்சிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்கள் தொடக்க விழா தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பில் 515 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மண்டலத்துக்கு 15 பஸ்கள் வந்து உள்ளன’ என்றார்.
விழாவில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்