என் மலர்
நீங்கள் தேடியது "New Road"
- மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது.
- உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோயிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் பள்ளத்தால் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்த கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோவிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் குறிப்பாக 37-வது வார்டுக்கு உட்பட்ட
மங்கம்மாள் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. சமீபத்தில் அந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல சேர்மன் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
- 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,
காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.