search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Scheme"

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
    • இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சார்பில் நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில்கள்

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், வாறுகால் உள்ளிட்ட வற்றில் வீசப்படு வதை தடுக்க புதிய முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    இந்த திட்டத்தை முதன் முதலாக நெல்லை மண்டலத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தண்ணீர் பாட்டில்கள் ஒன்றுக்கு ரூ.1 விலை கொடுத்து வாங்கப்பட்டது.

    25 ஆயிரம்

    இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று வரை கொள்முதல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    • கடந்த 23-ந்தேதி காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம்தொடங்கப்பட்டது.
    • திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறியிருந்தனர்.

    பாட்டிலுக்கு ஒரு ரூபாய்

    இதற்கு நிரந்தர தீர்வு காணுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் முறையாக டவுன் மண்டலத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டமானது டவுன் சுகாதார அலுவலகத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தொடங்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டமானது தமிழகத்தில் நெல்லை மாநகராட்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 3 நாட்களுக்குள் சுமார் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டம் எனவும், மக்களின் நிலை உயரவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு ஏற்ப நெல்லையில் இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரத்திற்குள் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • ரெயில் நிலையங்களில் வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.

    நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும்.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள் மற்றம் வணிக நிறுவனங்களை அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.

    ரெயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை ரெயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புத்தகத்துடன் ரெயில் பயணத்திற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்த தகவலை மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் 'புத்தகத்துடன் ஒரு பயணம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மதுரை முதுநிலை கோட்ட ரெயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி, அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புத்தகத்துடன் ஒரு பயணம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட பிகானீர் வாராந்திர விரைவு ரெயில் குளிர்சாதன முதல் வகுப்பு பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து, அது மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் இன்று மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×