என் மலர்
நீங்கள் தேடியது "New Tar Road"
- பீஞ்சமந்தை மலைக்கு பஸ் இயக்கப்படும்
- அமைச்சர் துரைமுருகன் தகவல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்திற்க்கு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்லை.
இதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் 35 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
சாலை வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் நடந்தது.
இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு முறையான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோரிக்கை வைத்தனர்.
அதன்படி முதல் கட்டமாக முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை 6.4 கிலோ மீட்டர் தொலைவு ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது.
இதனை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அணைகட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ரிப்பன்வெட்டி துவக்கி வைத்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து பீஞ்சமந்தை மலை மீது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி, வீடு கட்ட ஆணை, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை என ரூ.9 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் பேசியதாவது:-
பஸ் வசதி
இந்த ஊருக்கு ரோடு போடுவது தண்ணிபட்ட பாடு. என்னமோ இந்த பாரஸ்டே இவங்களது மாறி வனத்துறையினர் பண்ணுறாங்க மந்திரி சொன்னா கூட கேட்க மாட்டேங்குறாங்க. கொஞ்ச நீக்கு போக்கோடு நடந்துகொள்ள வேண்டும்.
பீஞ்சமந்தைக்கு தேவையான டவரை பாராளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டியது. கதிர் ஆனந்திடம் சொல்லி அமைத்துகொடுக்க சொல்கிறேன்.
இந்த ஆட்சி வந்தபிறகு மலை வாழ் மக்களுக்கு பல திட்டங்களை செய்துள்ளோம்.
நான் யூடியூப் பக்கம் போனால் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை தான் அதிகம் பார்ப்பேன். திம்மம் பாரஸ்ட், சந்தியமங்கலம் போன்ற இடங்களில் மக்கள் வாழ்வதை பார்பேன். அதில் பழங்குடி மக்கள் வாழ்க்கையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மிருகத்தோடு மிருகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு விரைவில் சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, மினி பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், துணை பெருந்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் , துணைத் தலைவர் ரேணுகாதேவி, பீஞ்சமந்தை ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ஆனந்தன், துணைத் தலைவர் கம்சலா சுந்தரேசன் வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைகிறது
- அதிகாரி நேரில் ஆய்வு
நெமிலி:
நெமிலி அடுத்த சிறுணமல்லி, ஓச்சலம் சாலை முதல் கீழ்களத்தூர் வரை செல்லும் தார் சாலை மாண்டஸ் புயலின்போது தொடர்ந்து பெய்த கன மழையால் சேதமடைந்தது.
இதனால் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.
இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெமிலி ஒன்றிய குழுதலைவர் வடிவேலு உத்தரவின் படி டி.என்.ஆர்,எஸ், திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. ஒப்பந்ததாரர் சங்கர் இப்பணியினை மேற்கொண்டார், பொறியாளர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர். தமிழரசி நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த தார் சாலை வசதியினால் 10 -ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி:
பண்டாரவிளையில் இருந்து பெருங்குளம் வரை ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து வேலையை தொடங்கி வைத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தொடர்ந்து பெருங்குளம் மற்றும் மங்கலகுறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வயல்களில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை வடியவைப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டியில் இருந்து சிவராமங்கலம், பொட்டல், மாங்கொட்டாபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி வழியாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு ஆத்தாம்பழம் வடிகால் மடை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் தண்ணீர் செல்கிறது. தற்போது இந்த வாய்க்கால் பெருங்குளம், மங்கலகுறிச்சி மற்றும் ஆத்தாம்பழம் வரை தூர்வாரப்படாமல் அமலை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் வயல்களில் அதிகப்படியாக தேங்கும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் மங்கலகுறிச்சி பகுதியில் உள்ள வாழை வயலுக்குள் தண்ணீர் சென்று வாழை பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ மங்கலகுறிச்சி வடிகால் வாய்க்காலை சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து ஒரிரு நாளில் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மங்கலகுறிச்சி, பெருங்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, மாநில ஊடக பிரிவு முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரவீனா, பெருங்குளம் நகர தி.மு.க. செயலாளர் நவநீத முத்துக்குமார், அவைத்தலைவர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டுப்புத்தூர் பேரூராட்சி ஆண்டாபுரம் மெயின் ரோடு முதல் மயானம் வரை செல்லும் தார் சாலை 81- லட்சம் ரூபாய் செலவில் அமைக்க படுகிறது.
- பணியை எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி ஆண்டாபுரம் மெயின் ரோடு முதல் மயானம் வரை செல்லும் தார் சாலை 81- லட்சம் ரூபாய் செலவில் அமைக்க பூமி பூஜை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ்,பொறியாளர் ரமேஷ் தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந. திருஞானம் காட்டுப்புத்தூர் நகரச் செயலாளர் கே.டி.எஸ். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
அனைவரையும் பேரூராட்சி செயல் அலுவலர் அ.சாகுல் அமீது வரவேற்றார். ரூபாய் 81 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் தரமாகவும், விரைந்தும் பணியை முடிக்க அறிவுரை கூறினார்.