என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nuclear"
- அணு ஆயுதம் குறைப்பு காரணமாக அமெரிக்கா- ரஷியா இடையே START ஒப்பந்தம்
- உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதால் ரஷியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது
அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது.
மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-
அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம்.
அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன.
START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது. ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.
- கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
- கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.
நெல்லை:
அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்பாளர் சுப.உதயகுமார் இன்று நெல்லை கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றியும் கட்டப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. வள்ளியூர் தேர்தல் பிரசா ரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதனை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி, சமூக அமைப்பு தலைவர்களுடன் போராட் டம் நடத்தப் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், மனிதநேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாரியப்ப பாண்டியன், திருக்குமரன், லெனின் கென்னடி மற்றம் பலர் உடனிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட விரும்புகிற சீனா, ரஷியா உள்ளிட்ட எவருக்கும் விடப்படுகிற அச்சுறுத்தலாக இது அமைகிறது” என்று கூறினார்.
நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுடன் கையெழுத்து போட்ட ரஷிய அதிபர் மிக்கேல் கார்பச்சேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவு, அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என்ற முடிவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரித்தார்.
டிரம்பின் முடிவு வருந்தத்தக்கது என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, ரஷியாவை தனது சொந்த பாதுகாப்பை பார்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்துவிடும்” என்று எச்சரித்துள்ளார். #DonaldTrump #Nuclear
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்