என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "one killed"
- முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆட்டோ மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது52). இவரது மனைவி பத்மா. இவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். டி.பி. மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பயணிகள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து பாண்டியின் மனைவி பத்மா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர் செக்காணூரணியை சேர்ந்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாலை வீடுதிரும்பியபோதுராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாலூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது டி.ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார்.
- அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
க்டலூர்:
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாரிவேந்தர் ( வயது29) பன்னீர்செல்வம் மகன் அறிவழகன் ( 26) தர்மலிங்கம் மகன் சுதாகர்( 30) ஆகிய 3 பேரும் பாரிவேந்தருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக கச்சிமைலூர் சென்றுவிட்டு மீண்டும் அரியநாச்சி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார். பாசார் கிராமம் கொளஞ்சியப்பன் வயல் அருகே வந்தபோது வளைவில் வாகனம் திரும்பும் போது எதிர்பாராத விதமாக இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட 3 பேரையும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அறிவழகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து இறந்த அறிவழகன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
- கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம்:
கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி ( வயது 51),டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36) , வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69) ,அவரது மனைவி மீனாட்சி (56) ,மகள் கிருத்திகா (29,)ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூர்த்தி (51) ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பலத்த காயமடைந்த மற்றவர்களுகுகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேல் படைகளும் அவர்களுக்கு எதிராக தொடந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. #PalestianianRocketFire #Isreal
அப்போது அங்குவந்த ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த போலீசாரையும் அவர் கத்தியால் குத்த முயன்றதால் கார் டிரைவர் என கருதப்படும் அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். #Onekilled #Melbournestabbing
தருமபுரி:
தருமபுரி அடுத்துள்ள நாட்டாண்மை புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48.) நிதி நிறுவன அதிபரான இவர் பைனான்ஷியல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சத்யா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார். தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்