search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Open AI"

    • எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர்.
    • Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி ஏஐ இருக்கும்.

    உலகத்தை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. சோசியல் மீடியா முதல் தொழில்துறை  வரை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி ஏஐ தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.

    அந்த வகையில் சாட் ஜி.பி.டி.யை உருவாக்கிய முன்னணி ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்ட்ராபெர்ரி [Strawberry] என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் குறித்து பலர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பிராஜக்ட் ஸ்ட்ராபெர்ரியை ஓபன் ஏஐ நிறுவனம் மிகவும் ரகசியமாக செய்து வருவதாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    இந்த ஸ்ட்ராபெர்ரி திட்டத்தின் மூலம் ஏஐ மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், லாஜிக்கல் ரீசனிங், எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி ரோபோட்டுக்கு உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத்தரும் தருணம் நிஜத்தில் நடந்து வருகிறது.

     

    கிட்டத்தட்ட மனிதனின் அறிவை பிரதி செய்யும் வகையிலான ஏஐ மாடலை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் முயன்று வருகிறது. கூகுள்,மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாக்கிவரும் இந்த புதிய ஏஐ வருங்காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான சாப்டவேர்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய ஸ்ட்ராபெர்ரி ஏஐ திட்டம் குறித்து ஓபன் ஏஐ இன்னும் உறுதி செய்யவில்லை.

     

    ஆனால் சமீபத்தில் ஓபன் ஏஐ பரிசோதனை செய்த Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏஐ சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெர்ரி ஏஐ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    ×