search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat leaders"

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் மதிவாணன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் கமிஷனர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர், புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் மதிவாணன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் குமாரகிரி ஊராட்சிமன்ற தலைவர் ஜாக்சன் துரைமணி உள்ளிட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு ஊராட்சி செயலர் சங்கரராம சுப்பிரமணியன் உட்பட ஊராட்சி செயலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலர்கள் கலந்து கொண்டனர், முடிவைத்தானேந்தல் ஊராட்சி தலைவர் ரம்யா நன்றி கூறினார்.

    • மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்
    • கலெக்டர் கடும் எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்கும் நம்ம ஊரூ சூப்பரு விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கிராமத்தில் குழந்தைகள் விடுமுறை நாட்களில் குளம், குட்டை ஆறுகளில் சென்று விளையாடுவதை தவிர்க்க அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    குழந்தை திருமணம் நடைபெற்றால் நீங்களும் அதற்கு ஒரு முக்கிய குற்றவாளி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி ஏற்று செயல்படுங்கள்.

    ஒவ்வொரு ஊராட்சிகளும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அந்தப் பிரச்சினைகளை பெரிதாக்கி தூண்டிவிட்டு பொதுமக்களை சாலை மறியல், போராட்டங்கள் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களே அல்லது பெண் தலைவர்களின் கணவர்மார்களே தூண்டுதலாக உள்ளனர் என தெரிய வருகிறது.

    சாலை வசதி அல்லது பட்டா தேவை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதனை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக சில ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்கள்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு விதிமுறைகள் என்ன தெரிவிக்கின்றதோ அதை பின்பற்றியே ஒவ்வொரு வளர்ச்சி திட்டமும் செயல்படு்தப்படுகிறது.

    விதிமுறைகளை மீறி செயல்படுத்த முடியாத வகையில் இருக்கும் பிரச்சனைகளை தூண்டிவிட்டு பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வருகிறது. இவைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    இதை ஊராட்சி மன்ற தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சிணையாக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தி விதிமுறைகளின் படியே செயல்படுத்த முடியும் என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

    பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உங்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பிரச்சனைகளை தூண்டி விடுவதற்கு உங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கிராமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
    • எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி தலைவர்கள் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • டெண்டர் பிரச்சினையால் ஊராட்சி தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு செயலாளர் ஜெயராம், பொருளாளர் பால்ராஜ் உள்பட ஊராட்சி தலைவர்கள் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெக தீசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும்போது தங்களுக்கு தெரியாமலேயே டெண்டர் கோரப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ஊராட்சிகள் யூனியனுக்கு கட்டுப்பட்டது என்பதால் தமிழகம் முழு வதும் இேத நடை முறைதான் கடைபிடிக்க ப்படுகிறது என தெரி வித்தனர்.

    இதனால் அதிருப்தி அடைந்த ஊராட்சி தலைவர்கள் அங்கிருந்து வெளி யேறினர். கூட்ட மைப்பின் பொருளாளர் பால்ராஜ் இது குறித்து தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஊராட்சி, கிரா மசபை கூட்ட முடிவின்படி தேர்வு செய்து டெண்டர் நடைமுறைப்படுத்த அரசு ஆணை உள்ளது.

    அந்த அடிப்படையில் ஊராட்சி தலைவர்களின் ஆலோச னையில் டெண்டர்கள் நடவடிக்கையின்றி ஒன்றிய தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு தன்னிச்சையாக டெண்டர் விட பணிகள் நடப்பதை அறிந்தோம். இதற்கு ஊராட்சி தலைவர்கள் சார்பில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தோம்.

    ஒளிவு மறைவற்ற டெண்டர் நடத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. எனவே ஊராட்சி தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

    • கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஊராட்சி துணைத்தலைவர் கையெப்பமிடும் அதிகாரம் ரத்து செய்து விடவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் லோக சங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் ஆஷா தேவி, சுப்பிரமணியன், இணைச்செயலாளர் சுப்புலட்சுமி, துணைச் செயலர்கள், சேர்மகனி, பராசக்தி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்குவது தொடர்பான கூட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது.
    • தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்குவது தொடர்பான கூட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது.

    இதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிர்வாகிகளாக கூட்டமைப்பு தலைவராக பேட்டை ரூரல் ஊராட்சி தலைவர் சின்னதுரை, செயலாளராக தாழையூத்து ஊராட்சி தலைவர் பீர்முகைதீனும், பொருளாளராக மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ளப்பாண்டியும், துணைத்தலைவர்களாக ஆஷாதேவி, சுப்பிரமணியனும், இணை செயலாளராக சுப்புலெட்சுமி , துணை செயலாளர்களாக சேர்மகனி, பராசக்தியும், செயற்குழு உறுப்பினர்களாக சந்திரா, சண்முக தாய், சுரேஷ், திருப்பதி, சுப்பு லட்சுமி , தன்சில் ரோஸ், பசுபதி ,வேம்பு, பரமசிவன்,ஆலோசகர்களாக இசக்கி ராணி, முருகன்,மெர்சி, ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.இதில் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 பஞ்சாயத்து தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியானது.
    • 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்குக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 பஞ்சாயத்து தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்குக்கு வந்தனர்.

    அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. ெபாறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் கூறும்போது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் தொடர்பாக மனு கொடுக்க சென்றவர்களை பா.ஜனதா கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×