search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat secretaries"

    • கடலாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஐசக் நியூட்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் செந்தில் பொன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல பொறுப்பாளர் சக்தி முருகன் நன்றி கூறினார்.

    • 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
    • 176 தபால்கள் அனுப்பப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவுக்கு, 5-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தபால் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் கிராம ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 10-ஆயிரம் வழங்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு காலமுறை ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும்.

    மேலும் அலுவலகம் நேரம் தாண்டி பணிகள் செய்ய நெருக்கடி நிலைமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும், உள்ளிட 5-அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.

    அப்போது 29-ஊராட்சியில் இருந்து 176- தபால்கள் அனுப்பப்பட்டது.

    • மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி.
    • 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி செயலாளராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார், காரமடை ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் உடன் சேர்ந்து மருதூர் ஊராட்சியில் சாலை அமைத்தல், ஊராட்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு பணிகளில் ஊழலில் ஈடுபட்டதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதன்பேரில் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சதீஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்தும் வரை 17 ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் இன்று விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டரிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களின் இந்த போராட்டத்தால், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்ட பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வேலைப்பழுவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    கீழக்கரை

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலா்கள் கடந்த 12-ந்தேதி முதல் 3 நாள்கள் பணி விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடங்கினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன் றியத்தைச் சேர்ந்த 33 ஊராட்சி செயலர்கள். தங்களது கோரிக்கைகளான ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை டி.என், பி.எஸ், சி. மூலம் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலருக்கு வேலைப்பழுவை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மாவட்ட செயலாளர் முருகன் வழி நடத்தினார். மாவட்டத் துணைத்தலைவர் சேகு ஜலாலுதின், ஒன்றியத் தலைவர் ஜெயபால், செயலாளர் பழனிமுருகன், ஒன்றிய பொருளாளர் மங்களசாமி முன்னிலை வகித்தனர்.

    ×