என் மலர்
நீங்கள் தேடியது "Panel"
- பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
- 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது.
இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.
அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளும் பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை கைது செய்தனர்.
மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த நான்கு நகைக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக் கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் இன்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.
கடையின் உள்ளே நகைகள், ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் உரிமையாளர் ஏதாவது பொருளை மறைத்து வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்தனர்.
மேலும் சோதனை நடைபெறும் போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சோதனை முடிவடைந்த பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அந்த நகைக்கடையில் சோதனை செய்ய உள்ளனர்.
- போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை.
- மேலும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா சட்டமானது. தற்போது அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேர்வுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்யும். இந்தக் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் குறித்து பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக குஜராத் அரசு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
- இந்தக் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமை தாங்குகிறார்.
அகமதாபாத்:
நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
உத்தரகாண்டை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு தனது அறிக்கையை 45 நாளில் தயாரித்து அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி.எல்.மீனா, வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர், சமூக ஆர்வலர் கீதா ஷ்ராப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.