search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panic"

    • தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
    • உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

    கடலூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர்கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது .நடைப்பயிற்சி செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும் போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது .

    இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பிய படி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூர்களை போக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்
    • 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நல்வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.  இந்த சூழலில் காரைக்கால் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகிவிட்டதாக எண்ணி, ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுதனி மையில் இருந்த நிலையில், அந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவை மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால்2 பேர் உயிரிழந்த தால்காரைக்கால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • கோடை காலம் நிலவி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை காலம் நிலவி வருவதால் நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன.

    இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து யானை, கரடி, மான்,மிளா போன்ற வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் தேடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மரங்களை சாய்த்தது

    இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த 7 தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி சாய்த்து சென்றுள்ளது.

    தொடர்ந்து அருகில் இருந்த வாழை தோட்டத்தில் புகுந்த யானை அங்கிருந்த வாழைக்கன்றுகளையும் பிடுங்கி சேதப்படுத்தி சென்றது. காலையில் பொதுமக்கள் சிலர் குடி யிருப்பு பகுதிகளில் யானை கால் தடம் உள்ளதை கண்டும், தென்னை, வாழை மரங்கள் சாய்க்கப்பட்டு இருப்பதையும் கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பொதுமக்கள் பீதி

    இரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையால் அதிர்ஷ்ட வசமாக பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் ஒற்றை யானையின் நட மாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் வனத்துறையினர் ஒற்றை யானையை கண்டறிந்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெங்கட்( வயது 58).நேற்று இரவு வழக்கம் போல்கடையைப் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது
    • பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது,.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்( வயது 58)இவருக்கு அதே தெருவில் மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு பார்வதி இவரது கணவர் சரவணன் ஆகியோர் நேற்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து 7 லட்சம் மதிப்பிலான 18 பவுன் நகைகள் திருடி சென்றது தெரியவந்தது.

    மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீசாரிடம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வோம் ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோவில்கள், கடைகள் மற்றும் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், போலீசார் வீட்டிலே பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு சவால் விடும் அளவில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்இந்தத் தொடர் திருட்டு சம்பவம் ,போலீசார் வீட்டிலே திருடிய சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகே 24 மணி நேரமும் உயர் அதிகாரிகள் முதல் போலீசார் வரை சென்று வரும் சாலையில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் திருடிய சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் போலீசார் ஏற்கனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படையை அமைத்து தீவிரமாக கவனம் செலுத்தி கைது செய்வதோடு வருங்காலங்களில் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
    • உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது.

    கடலூர்:

    கோவில் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஆனைக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்து இரும்பு கேட்டை பூட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவிலில் இரும்பு கேட்டின் பூட்டு உடைந்து திறந்திருந்தது பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் இருந்த கேமராக்களை சேதம் செய்து சென்றதும் தெரியவந்தது.பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ைகரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

    உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில்கள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்மேலும் ஆணைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் பகுதிகளை சுற்றி போலீசார் வீடுகள் இருந்து வருவதால் எந்நேரமும் போலீசார் இவ்வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வருவதால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு திருட்டு சம்ப வத்தை உடனடியாக தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×