என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "participated"
- நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி:
ஏ.எம்.சி.ஏ.டி.-எஸ்.எச்.எல். இணைந்து அகில இந்திய சிக்கல் தீர்க்கும் திட்ட வரைவு மென்பொருள் போட்டியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெ க்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை இறுதியாண்டு மாணவர் பிரவீன்குமார் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று
கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவரை கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
ஏற்கனவே 2021, 2022-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- மதுரை-12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு; 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
- தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.
தேர்வர்களின் செல்போன்களை ேபாலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.(இடம்: அமெரிக்கன் கல்லூரி).
.............
மதுரை
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது.
இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி விண்ணப்ப தாரர்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்குள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
மதுரை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கும் 12 மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
திருமங்கலம் வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
- தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 58). இவர் சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த ஆண்டு முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாததை கருத்தில் கொண்டு அந்த தனியார் கம்பெனி நிர்வாகம் திடீரென அவரை வேலையில் இருந்து அனுப்பியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த மண்ணாங்கட்டிக்கு, கம்பெனி நிர்வாகம் எந்த விதமான தொகை வழங்கவில்லை என தெரிகிறது.
மண்ணாங்கட்டியின் மனைவி பிரேமாராணி கடந்த 6 மாதங்களாக கணவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரவேண்டியும், 20 ஆண்டு களாக அவர் கம்பெனியில் பணியாற்றியமைக்காகவும் மேலும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் தொகையினை பெற்று தர கூறியும் கம்பெனி நிர்வாகத்தை அணுகி உள்ளனர்.
ஆனால் கம்பெனி நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலை யில் மண்ணாங்கட்டி, இவரது மனைவி பிரேமாராணி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சேதராப்பட்டியில் உள்ள கம்பெனிக்கு வந்தனர்.
கம்பெனியின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மண்ணாங்கட்டி மனைவி பிரேமாராணி, இந்த கம்பெனிக்காக இரவும் பகலும் உழைத்த எனது கணவர் மண்ணாங்கட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வாங்க கூட பணம் இல்லாமல் நடுவீதிக்கு வந்துள்ளோம். என் கணவருக்கு சேர வேண்டிய பணத்தை நிர்வாகம் கொடுக்காவிட்டால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.
தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சேதராப்பட்டு போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரையும் அவர்க ளது உறவினர்களையும் சமாதானப்படுத்தினர். இதற்கு முடிவு தெரியாமல் போக மாட்டோம் எனக் கூறி அங்கேயே உறவினர்கள் முற்றுகையிட்டு வருகின்ற னர். இந்த சம்பவத்தால் சேதராப்பட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்றார்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 17-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு கண்ணன் கோவில் திட லில் நடந்தது.
தி.மு.க. மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவரும், ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவருமான ஆதித்தன் வரவேற்றார்.
பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் காளை யாக காஞ்சிரங்குடி செவளைக்காளை களமிறக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழு வினர் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சோளம்பட்டி தங்கம் நினைவு குழு வீரர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு பெற்றனர்.
காளைகளில் செல்வ குமார் என்பவரது காளை சிறப்பு பரிசு பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு 25 நிமிடங்கள் காளையை பிடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மண்டபம் மேற்கு கவிதா கதிரேசன், திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி மேற்கு கார்த்திகேஸ்வரி கொத்த லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சங்கு (எ) முத்து ராமலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, மதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கிருஷ்ணா புரம் கிராம பொதுமக்கள், விளை யாட்டுக்குழு, அனைத்து மகளிர் மன்றங்கள் செய்திருந்தன. போட்டியை காண்பதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரையில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.
மதுரை
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில் ஒன்றிய- மாவட்ட அளவில் சதுரங்க போட்டிகள் நடத்துவது என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முடிவு செய்தது.
அதன்படி 6,7,8-ம் வகுப்பு,9,10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு ஆகிய 3 பிரிவுகளில், சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7,8-ம் வகுப்புகளுக்கான சதுரங்க போட்டியில் மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சோலையம்மாள், தமிழரசி, அனுப்பானடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மகராஜ், டி.அரசம்பட்டி உயர்நிலைப்பள்ளி பாண்டியராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
9,10-ம் வகுப்புக்கான போட்டியில் அ.வல்லா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலைச்செல்வி, கோகிலா, தேவநாத், சந்தோஷ் ஆகியோர் தேர்வாகினர்.
11,12-ம் வகுப்புக்கான சதுரங்க போட்டியில் ஒத்தக்கடை மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி சங்கீதா, வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றிசெல்வி, பிரதீப், பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகமது தபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.
பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை மாமல்லபுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதலிடம் பெற்ற 4 பேர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாமல்லபுரம் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நிகரகுவா நாட்டு வீரர்களை, மதுரை மாணவர் பிரதீப் அடையாள அட்டை ஏந்தியபடி அழைத்து வந்தார்.
மதுரையில் இருந்து 4 பேர் அடங்கிய குழு, நேற்று பஸ் மூலம் மாமல்லபுரத்துக்கு சென்றது. இந்த நிலையில் 4 பேர் குழு, நாளை மாமல்லபுரம் செல்கிறது. அங்கு அவர்களுக்கு செம்மஞ்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.
விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்