search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paula Badosa"

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செக் வீராங்கனை முச்சோவா வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார்.

    இதில் படோசா 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

    இதில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் மோதினார். இதில் படோசா முதல் செட்டை 6-7 (4-7)இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட படோசா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் ஷாங் உடன் மோதினார். இதில் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் கோகோ காப், படோசாவை எதிர்கொள்கிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனையான பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய படோசா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இவர் நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சீனாவின் ஷாங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

    முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×