என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pavement"
- கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
- இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.
அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி நடைபாதை தளம் திறக்கப்பட்டது.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் உள்ள டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் நுழைவு வாயில் முதல் வகுப்பறை வரை தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நடைபாதைத்தளம் பி. அய்யப்பன் எம்.எல்.ஏ. அமைத்துக்கொடுத்தார். அதன் திறப்பு விழாவில் பள்ளி நிர்வாகி ப. கேசவன் தலைமையில் தலைமையாசிரியர் ஆக்னஸ் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
வார்டு உறுப்பினர் சந்திரன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு நகர செயலாளர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அழகுமாரி தொகுதி செயலாளர் ராஜா வில்லாணி பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
- ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.
கடலூர்:
சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-
சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
- மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கியது.
தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.
இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது :-
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பாரம்பரியமிக்கது. தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதில் தமிழ் அன்னை செயற்கை நீரூற்று புதுப்பித்தல், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைத்தல், மான்கள் இருந்த இடத்தில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
இன்னும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. இதேபோல் சேர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும்.
அனைத்து பணிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சிவகங்கை பூங்கா மாறி உள்ளது.
அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சிவகங்கை பூங்கா திறக்கப்படும். அதன் பிறகு மக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் கோபால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
- ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கடந்த வாரம் நீர்நிலை மீட்ப்பாளர்கள் குழுவினர் சார்பில் குளத்தை காணவில்லை என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் அளவை செய்து குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறிய குட்டை போல் காணப்பட்டது.
இந்த நிலையில் குளத்தை காணவில்லை என்று பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
இந்த நிலையில் பட்டுக்கோ ட்டைவட்டா ட்சியர் ராமச்ச ந்திரன் தலைமையில் பட்டு க்கோட்டை நகராட்சி ஆணையர் குமார், நகரமை ப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அய்யனார் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தினை நில அளவை மேற்கொண்டதில், குளம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் எல்லைப் பகுதிகளில் எல்லைக் கற்கள் நடப்ப ட்டன.
பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் இந்த குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி கழிவு நீரை வெளியேற்றி குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக டெண்டர் விடப்பட்ட பணியை மேற்கொண்ட பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள மேலும் பல குளங்களை சர்வே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.
- இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
- நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் தினமும் ஏராளமான பொது மக்கள் நடந்து செல்கின்றனர். பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு 3221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மீட்டர் தூரத்திற்கு நடைபாதை தற்போது மிக குறுகியதாக காட்சியளிக்கிறது. அந்த இடங்களில் பிடிமானம் ஏதும் இல்லாததை கண்டு கொள்ளாமல் சிலர் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் தவறி விழக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து வந்து மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை பலமாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநகராட்சி சார்பில் புதிதாக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
- பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலை வருமான வரித்துறை அலுவலகம் பின்புறம் நியூ காவேரி நகர் (பாத்திமா நகர்) அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாகபூங்கா அமைக்க முடிவு செய்யப்ப ட்டது. அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கி பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பூங்காவானது 16410 சதுர அடியில் ரூ.31.5 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.
இந்த பூமி பூஜை விழாவில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, பணி ஆய்வாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்