search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perarivalan"

    மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    நீலாம்பூர்:

    கோவை சூலூர் சின்னியம்பாளையத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இரட்டை வேடத்தின் உச்சகட்டமாக பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது வேதனையளிக்கிறது.

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான நாளன்று ஊட்டி சென்ற முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாகவும், இது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் உணர்வுகளுக்கு 100 சதவீதம் எதிராகவும் அமைந்துள்ளது.

    நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 கோடிக்கு மேலான உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்னர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு கலால் வரியை குறைத்தது போல மாநில அரசும் குறைக்க வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும்.

    அ.தி.முக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தி.மு.கவை எதிர்த்து வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மத்தியிலே பா.ஜ.கவுடன் கூட்டணி. மாநிலத்திலேயே அ.தி.மு.கவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது.

    தேங்காய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. இதனால் பல லட்சம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய-மாநில அரசுகள் தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை நம்பியுள்ள விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
    • தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.

    முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

    நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.

    பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.

    ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

    அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.

    நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.

    சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.

    என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.

    தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

    ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.

    இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.

    7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.

    கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
    திருப்பத்தூர் :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

    பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு பலத்த காவலுடன் சென்று கையெழுத்திட்டு வந்தார். மேலும் டாக்டர்ககளின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பொருள் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட இருந்தார்.

    இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து நேற்று தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு வருகிற டிசம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க பேரறிவாளன் தரப்பு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது.
    சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது போல் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் தமிழக அரசே விடுவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

    மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தி திரைப்பட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் புதல்வருமான சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத், 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய்தத்தை தாங்களே விடுதலை செய்ததாக தெரிவித்திருக்கிறது.

    2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்தத் தீர்ப்பின்படி, மத்திய அரசு சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.

    ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை.

    மத்திய அரசின் அனுமதி பெறாமல் தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால், இவ்வி‌ஷயத்தில் மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

    மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை.

    இந்தியக் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு, தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. இவற்றைப் பார்க்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்ற ஐயம் எழுகிறது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை சரியல்ல; மக்களாட்சி முறைக்கு அழகுமல்ல.


    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மாநில அமைச்சரவை பரிந்துரைப்படி விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு அனுப்பி, இன்றுடன் 250 நாட்களாகி விட்ட நிலையில் அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் ஆளுனர் தாமதம் செய்கிறார். தமிழர்கள் என்பதாலேயே அவர்களின் விடுதலை தாமதிக்கப்படுகிறதோ என்ற ஐயத்தை இது அதிகப்படுத்துகிறது.

    7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுனருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுனர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே சஞ்சய்தத் விடுதலையானார் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.


    இதையடுத்து பேரறிவாளன் தரப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர். அதில் சஞ்சய்தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கி இருந்தீர்களா? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு சிறை அதிகாரிகள் அளித்த பதிலில் சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை விடுதலை செய்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

    சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டுள்ளார். சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர்.

    சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்ததை போலவே அரசமைப்பு சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னருக்கு வர உள்ளது.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட நெடிய பயணத்தை கடந்து வந்திருக்கிறது.

    இந்த வழக்கின் திருப்பமாக, 7 பேர் விடுதலையில் உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் வலுத்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து, கவர்னருக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த தீர்மானம் வந்தவுடனேயே, இதுகுறித்த வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக தனது முடிவை கவர்னரால் அறிவிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாளைக்கூட வீணாக்காமல் உடனடியாக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். உடனடியாக சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையின்போது பலர் அவரிடம், ‘இது 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்களில் பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த தீர்ப்புகளின் அடிப்படையில் நாம் இந்த பிரச்சினையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. எனவே தேசிய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு, அதன்பேரில் முடிவெடுப்பதே சிறந்தது’ என்று கருத்து தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் இந்திய அளவில் தலை சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துகளை கவர்னர் கேட்டு இருக்கிறார்.



    இந்தநிலையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    அதேநேரத்தில், இந்திய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் கைக்கு வர உள்ளது. அதன் பின்னர் கவர்னர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #mkstalin #perarivalan
    சென்னை:

    திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தினால் இட்டுக்கட்டிய பிரச்னைகள் எழக்கூடும். 7 பேரையும் விடுவிக்கும் அமைச்சரவை தீர்மானம் மீது 8 மாதங்களாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனி ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை, வேறு எந்த காரணத்தையும் சொல்ல வழியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  #mkstalin #perarivalan 
    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #RajivGandhiAssassinationcase #OPS
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவரது வழியிலான தற்போதைய அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து வருவதோடு, கூடுதல் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருகிறது.

    இதன் காரணமாக அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நடக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.வில் நல்ல சூழ்நிலை நிலவி வருகிறது. மறு வாக்குப்பதிவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரத்தின் ஒப்புகை சீட்டு குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து தமிழக ஆளுநரை தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார் உள்ளது. இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள், பா.ஜனதா மீதான மக்கள் அதிருப்தி, அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

    உங்கள் யூகங்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என ஓ.பி.எஸ். கூறிச் சென்றார். #RajivGandhiAssassinationcase #OPS

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.



    28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அறிவு (பேரறிவாளன்) பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன். அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முறையாவது நல்லது நடக்க வேண்டும் என கண் கலங்கினார். அற்புதம்மாள் #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit


    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். #RajivMurderCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்ககோரி தமிழக கவர்னருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு கொடுத்தோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் இன்று விசாரித்தனர்.

    மனுதாரர் சார்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார். மனு மீதான விசாரணையை வருகிற 27ந்தேதி (சனிக்கிழமைக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.  #RajivMurderCase
    ×