என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "period"
- ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
- மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ இணையதளம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் சில மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்
பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப் பித்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.
மங்கலம்:
விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி கூறியதாவது:-
கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்சார வாரிய தலைவா் ராஜேஷ்லக்கானி, இயக்குநா் சிவலிங்கராஜன் ஆகியோரை சந்தித்து விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து உடனடியாக 6 தவணைகள் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத தொகையை ரத்து செய்வது குறித்து கணக்கீடு செய்து பரிசீலிப்பதாக இயக்குநா் உறுதியளித்தாா்.இதற்காக கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.
- நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர்.
- ஷார்ட்ஸின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.
இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினருக்கு விளையாடும்போது அணியும் உடைகளை பிரபல நிறுவனமான நைக் (Nike) தயாரித்து தருகிறது.
இங்கிலாந்து மகளிர் கால்பந்து வீராங்கனைகள் நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர்.
மாதவிடாய் காலத்தில் வெள்ளை நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதில் இங்கிலாந்து வீராங்கனைகள் சொல்ல முடியாத சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஷார்ட்சின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று நீல நிற ஷார்ட்சை அணிய இங்கிலாந்து மகளிர் கால்பந்து நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் வியாழக்கிழமை களம் காண்கிறது இங்கிலாந்து மகளிர் அணி. அந்த ஆட்டத்தில் இருந்து நீல நிற ஷார்ட்ஸ், வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.
- கொரோனா காலத்தில் உதவிய ராணுவ வீரருக்கு ஊர்வலமாக சென்று கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நன்றியோடு தங்களை காண வந்த கிராம மக்களுக்கு ராணுவவீரர் மரக்கன்றுகள் வழங்கினார்.
சாயர்புரம்:
ஏரல் தாலுகா கணபதி சமுத்திரத்தில், கடந்த கொரோனா காலங்களில் கிராம மக்கள் வாழ்வாதாரம் பொிதும் பாதிப்படைந்தனர்.
கிராம மக்களின் நிலை அறிந்த இதே பகுதியை சேர்ந்த ராணுவ அதிகாரியான அந்தோணி சுரேஷ் கிராம மக்களுக்கு உதவினார்.
தற்போது விடுமுறையில் வந்த ராணுவ அதிகாரிக்கு சாயர்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கணபதி சமுத்திரத்திரம் கிராம மக்கள் நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக சால்வை மற்றும் விளைபொருட்கள் வழங்கினார்.
மேலும் கணபதி சமுத்திரம் சிறுவா் சிறுமியா் பாரம்பரிய வீர கலையான சிலம்ப கலைஞர்களோடு ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்தனர். நன்றியோடு தங்களை காண வந்த கிராம மக்களுக்கு ராணுவவீரர் மரக்கன்றுகள் வழங்கினார்.
கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.
இந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.
அந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.
மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார். #FishingBan #FishingBanPeriod
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்