search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "persons"

    • ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
    • ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தடகளம் - 56, கூடைப்பந்து - 48, பேட்மின்டன் - 21, கிரிக்கெட் - 75, சதுரங்கம் - 2, கால்பந்து - 72, கபடி - 103, சிலம்பம் - 27, நீச்சல் - 6, டேபிள் டென்னிஸ் - 5, த்ரோபால் - 14, ஆக்கி - 72, வாலிபால் - 96, , பளு தூக்குதல் - 1, டென்னிஸ் - 2 பேர் என மொத்தம் 603 பேர் சென்னை செல்கின்றனர்.

    அதிகபட்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர், கல்லூரிகளை சேர்ந்த 207 பேர், பொதுமக்கள் 85 பேர், அரசு ஊழியர் 62 பேர், மாற்றுத்திறனாளி 29 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    • ராமநாதபுரம்: சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாத புரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கி 210 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

    அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா பேசும்போது கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்க ளுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பெறலாம்.

    இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படு கிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி, முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 4 பேர் ஜெயிலில் திடீரென உணவு சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் மத்திய ஜெயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் சங்ககிரியை சேர்ந்த தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வகுமார், குமார் என்கிற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 14 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதில் 12 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களது ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 12 பேரும் உடனடியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் திடீரென உணவு சாப்பிட மறுத்தனர். பின்னர் அதிகாரிகள் அவர்ளை சமாதானப்படுத்தி உணவு சாப்பிட செய்தனர். இதனால் சேலம் மத்திய ஜெயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×