என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Perumal Temple"
- கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர்:
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று காலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி, மயில் தோகையில் மாலை, கிரீடம், ஜடை என பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பெருமாளுக்கு பழங்களாலும் வண்ண வண்ண மலர்களாலும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் பவளவண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் தாயார் உற்சவர்களுக்கு மயில் தோகைகளால் மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
புரட்டாசி ஏகாதசி சனிக்கிழமையை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
- வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
தேவையான அளவு:
பச்சரிசி சாதம் - 2 கப்
துவரம்பருப்பு - வேக வைத்தது 1 கப்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 10
பரங்கிகாய் - 100 கி
கத்திரிக்காய் - 100 கி
அவரைக்காய் - 100 கி
சௌவ்சௌவ் - 100 கி
காராமணி - 100 கி
கொண்டைகடலை - 100 கி
பச்சை மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
புளி - ஒரு எலும்மிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
நெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கும் முறை:
• ஒரு வாணலியில் மிளகு, வெந்தயம், தனியா மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் நன்று ஆறியவுன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வரமிளகாய் 3, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
• பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிகாய், கத்திரிக்காய், அவரைக்காய், சௌவ்சௌவ் ஆகிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் நன்கு சமைக்கவும்.
• பின்னர் வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
• அதன் பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
• காய்கறி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
• இந்த நிலையில் புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
• இவையனைத்து நன்கு வெந்தவுடன் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
• இதனுடன் பெருங்காயம், வேகவைத்த பச்சரிசி சாதத்தை சேர்க்கவும்.
• பின்னர் ஒரு 1/2 கப் தண்ணீர், மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
• இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
• இதோ சுவையான பெருமாள் கோவில் கதம்ப சாதம் ரெடி.
- கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் நகைப்பெட்டி ஒரு தரப்பினருக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் வைத்து வந்தனர்.
இந்த பெருமாள் கோவில் உரிமை சம்மந்தமாக கடந்த 2012-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பெருமாள் கோவில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது என்றும் நகைபெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என முடிவானது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
- பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கும்பாபிஷேக பணி
இந்த கோவிலில் 2000-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதற்கான பணிகளை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.
தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை தொடங்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
- வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
- நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென்திருப்பேரை:
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பகவா னால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரு மாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முதல் தென்திருப்பேரை வரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவதிருப்பதி கோவி ல்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இந்த நவதிருப்பதி தலங்களில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.
தென்திருப்பேரை
நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திரு ப்பேரை மகர நெடுங் குழை க்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரி சையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
சுவாமி நிகரில் முகில் வண்ணன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடிமரம் கருடன் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வரிசையில் நின்று வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.
இதேபோல் நவத்தி ருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயா சனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாய கூத்தப்பெருமாள், இரட்டை திருப்பதி தேவர் பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
+3
- வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
- இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது.
நெல்லை:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதல் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்க ப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது. தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
கருடசேவை
தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்து கொண்டு பெருமாளை தாிசனம் செய்த னா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.
இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோவில்களில் இன்று இரவில் கருடசேவை நடக்கிறது.
- மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
- பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
சென்னை:
தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
திருமலையில் நடப்பது போல இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். அடுத்தநாள் ஹம்சவாசனத்திலும், 17-ந் தேதி முத்து பந்தலிலும் 15-ந் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வருகிறார். வரும் 19ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் மாலை 6.30 மணிக்கு கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது.
வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தெரிவித்தார். இக்கோவிலில் 3 நாட்களாக நடந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் முடிந்தது.
- பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர்.
- தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பெருமாள் மலை மீது குடி கொண்ட ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் 3-வது சனிக்கிழமை விழா வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- தேனி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி:
தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஏகதின பூஜையை முன்னிட்டு பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். கோவில் டிரஸ்டி வெங்கடேசன், பொருளாளர் கணபதி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான பூஜையை பட்டாச்சாரியார்கள் மணிவண்ணன், சீதாராமன், பாபு உள்பட பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
தென்திருப்பேரை:
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கொடிமரம் கருடன் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.
நவதிருப்பதி கோவில்கள்
இதேபோல் நவத்திருப்பதி களில் ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தர். இதற்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான லவங்கம் மாலை அணிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மிகவும் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான இன்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான வாசனை நிறைந்த, லவங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு தயாரிக்கபட்ட மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் ஜடை, கிரீடங்கள் அணிந்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விதவிதமான மலர்கள், பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனால் காலை முதலே சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்ததால் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதே போல் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், வளசரவாக்கம் பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலுமே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்