என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Photographer"
- பண்ருட்டியில் துணிகரம்: போட்ேடாகிராபர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அப்பாலு பத்தர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். போட்ேடா கிராபராக உள்ளார். இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்தர்ப் பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் செல்ேபான் மூலாம் ராஜராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பண்ருட்டிக்கு விரைந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து ராஜாராம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார் போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிந்து கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் லால்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலவாளாடி, வாளாடி, புறத்தாக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 2 போலீஸ் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் திருச்சி அண்ணாசாலை கைலாஷ்நகர் 3-வது கிராசை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ்குமார்(வயது 34) என்பதும், புகைப்பட கலைஞரான அவர் சொந்தமாக கேமரா வைத்து திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், ஆடம்பரமாக வாழ நினைத்த அவர் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட புகைப்பட கலைஞரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்