search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pillar"

    • நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    ஊட்டி,

    இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி அருகே போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி அந்த நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பார்த்து ரசித்து, அதனை தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • ராஜேந்திர சோழன் கால கோட்டைவாசல் தூண் கண்டெடுக்கப்பட்டது.
    • 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.

    இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர், வடிகால் அமைப்பு போன்ற சுவர் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கியது. இந்த பணியின்போது சோழர் காலத்து கட்டிட எச்சங்கள், பழங்கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சி, பழங்கால பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இந்த பணிகள் நிறைவடைந்தன.

    இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பு, 11-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும், சீன நாட்டிற்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானைவோடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் மாளிகைமேட்டை அடுத்த உட்கோட்டை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் நேற்று கிரானைட் கல் தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தூண் 72 செ.மீ. அகலமும், 6.40 மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த தூணானது தரையில் பக்கவாட்டில் கிடப்பதால் உடைந்திருக்கலாம் அல்லது சாய்ந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் அகழ்வாய்வு பணியை தொடரும்போதுதான் அதனுடைய முழு விவரமும் தெரியக்கூடும். இந்த கல்தூணானது ராஜேந்திர சோழன் காலத்தில் மாளிகையின் தென்பகுதி கோட்டை வாசலில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

    இந்நிலையில், அங்குள்ள மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் மழைகாலங்களில் பிணத்தை எரியூட்டும்போது கொட்டகை இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு வேற மயானம் கிடையாது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் எனவும், மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
    • பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 1918 ஜனவரி 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு,100ஆண்டுகளை கடத்துள்ளது.

    நகராட்சியாக 104 ஆண்டுகளான நிலையில், நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டு, அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இந்நிதியின் கீழ் ரூ. 3.75 கோடி செலவில், பஸ் நிலையம் விரிவாக்கம், 12.97 கோடி ரூபாய் செலவில் தங்கம்மாள் ஓடை பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்புச்சுவர், ரூ.15.98 கோடி செலவில் கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில்மழை நீர் வடிகால், சந்தை வளாகம், பூங்கா புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நகராட்சி புதிய அலுவலகத்தில், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன் அழகாக வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றிலும் பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது.
    • தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது.

    கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பாலத்தின் வழியே கனரக வாகனங்கள் இயக்காத அளவு தடுப்பு கம்புகள் வைத்து கட்டி வருகின்றனர்.

    மேலும் இரு புறமும் கனரக வாகனங்கள் செல்ல கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்

    சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் திடீரென உள்வாங்கியதால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் புழதிக்குடி கிராமம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளது.

    அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக புதிய பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×