என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pipe break"
கடலூர்:
கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.
மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது.
அவினாசி :
அவினாசி அருகே அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
குடிநீருக்காக மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இப்படி குடிநீர் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.
குண்டடம் :
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.
பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.
இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் குரங்கன் ஓடை அருகே செல்லாத்தாபாளையம் பிரிவு பேரூந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 10நாள்களாக காவிரிக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் சாக்கடையில் சென்று கலக்கிறது.
இக்குடிநீர் குழாய் மூலமாக அய்யகவுண்டன் பாளையம், செல்லாத்தாபாளையம், பாலிக்காடு, வேலம் பாளையம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு காவிரியாற்று குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குழாய் உடைப்பு காரணமாக மேற்கண்ட ஊர்களில் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, காவிரி குடிநீர் இணைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்தான் சரி செய்யவேண்டும் என்றும், அவர்கள் தற்போது காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்போது அங்கு பணியில் உள்ளனர். இதனால் தற்போது இதை சரிசெய்ய இயலாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்