என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Player"
- நாளை மதியம் 1 மணிக்கு பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
- ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன், தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு நாளை (ஞாயிற்று க்கிழமை) மதியம் 1 மணிக்கு பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
விருப்பம் உள்ள 21.5.1999-க்கு பிறகு 21.5.2010-க்கு முன் வரை பிறந்தவர்கள் உரிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தொடர்புக்கு 9363374174, 9940946946, 9994300671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஆர்.காளிதாஸ் வாண்டையார் தெரிவித்துள்ளார்.
- பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
- அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.
இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.
அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.
அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
- சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழர் விடுதலைக் களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வக்கீல்கள் மணிகண்டன், பிரபு ஜீவன் மற்றும் மகேஷ், மாரி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
- வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை, பள்ளி தலைமை ஆசிரியை வீ.சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் அ.ரெங்கேஸ்வரி, ம.அன்னமேரி, எஸ்.நீலகண்டன், பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் பாரதிதாசன், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டினர்.
அதேபோல், அசோக்குமார் எம்.எல்.ஏ, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோரும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்