search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plots"

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது.
    • மனை ஒதுக்கீடு செய்வதற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் வீட்டுமனை திட் டப்பகுதியில் உள்ள 72 மனைகள் மொத்த கொள் முதல் செய்வதற்கு 2022 நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    1,453 சதுரடி கொண்ட ஒரு மனையின் விலை ரூ.16 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி உள்ள பகுதி என்பதால் மனை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3,093 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தனியார் மகாலில் குலுக்கல் முறையில் மனை கள் ஒதுக்கீடு செய்யும் முகாம் மதுரை கோட்ட மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி தலைமையில், செயற்பொறியாளர் பாண்டி யராஜ், கண்காணிப்பாளர் நாகராஜன், கலெக்டர் சார்பில் பார்வையாளராக உதவி ஆணையர் குருசந்தி ரன் முன்னிலையில் நடந்தது.

    மனை ஒதுக்கீடு செய்வ தற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஒரே எண்ணில் 2 டோக்கன் இடம் பெற்றுள்ளதாக கூறி பொதுமக்கள் அதி காரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் குலுக்கல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னி லையில் வெளிப்படையாக குலுக்கல் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
    • காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம்கள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக பொதும க்களிடம் இருந்து விண்ண ப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 10&ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது. அதன்படி 1, 9 முதல் 15, 21 முதல் 27 ஆகிய வார்டுகளுக்கு திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரோடு அம்மன் கலையரங்கத்திலும், 2 முதல் 8, 16 முதல் 20, 30 முதல் 32 ஆகிய வார்டுகளுக்கு பூலுவப்பட்டி நால்ரோடு சவுடாம்பிகைநகர் வி.எஸ். திருமண மண்டபத்திலும், 33 முதல் 35, 44 முதல் 51, 56, 58 முதல் 60 ஆகிய வார்டுகளுக்கு காங்கேயம் மெயின்ரோடு, பள்ளக்காட்டுப்புதூர் சோளியம்மன் கோவில் நற்பணி மன்றத்திலும், 28, 29, 36 முதல் 43, 52 முதல் 55, 57 ஆகிய வார்டுகளுக்கு மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.நகர் ரத்தின விநாயகர் கோவில் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் பத்திரம் நகல், மூலபத்திரம் (2016&க்கு முன்) நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெறும் முகாம்களுக்கு சென்று தங்கள் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக்கொ ள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும்.
    • கோவில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சங்கர் தலைமையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு இளநிலை உதவி ஆய்வாளர் பழனிவேல் கலந்துகொண்டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களான சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும். பொது இடத்தில் மலம் கழிக்கக்கூடாது. கோயில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    மனையை வரன்முறை படுத்த தவறினால் குடிநீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

     20.10.2016-க்கு முன் ஏற்படுத்தப்பட்ட மனைகள் அல்லது அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள குறைந்த அவகாசமே உள்ளதால் இந்த முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மனையின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், புலப்பட நகல், மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றின் நகல்களும் கரூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

    வரன்முறைப்படுத்த தவறும் மனைப்பிரிவுகளில் அனுமதியற்ற மனைகளாக அமைவதுடன் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் வழங்க இயலாது. மேலும், கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் மனை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற இயலாது.  பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனையின் கிரையப்பதிவு மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பகுதியினை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.  

    இவ்வாறு அவர் கூறினார். 

    முகாமில், நகராட்சி ஆணையர் அசோக்குமார், தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×