search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poisonous"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
    • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

    வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


    இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

    இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


    கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

    அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர்.
    • அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    குச்சிபாளையம் பகுதியில் மதகடிப்பட்டு-திருக்கனூர் செல்லும் சாலையில் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷ குளவிகள் அங்குள்ள ஆலமரத்தில் 2 இடங்களில் கூடு கட்டி உள்ளது.

    இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர். மேலும் திருபுவனை, சன்னியாசி குப்பம் ஆகிய பகுதி மக்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

    அவ்வப்போது விஷக்குளவிகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் இறந்ததால் பரபரப்பு நிலவியது.
    • கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பூமங்களப்பட்டியைச் சேர்ந்தசெந்தமிழ்ச்செல்வன் -சுமங்கலி ஆகியோரின் மகன் நிதிஷ் (வயது 12) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நிதிஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளியில் இருந்த போதுஅவனை ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது. இதில் அவனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நிதிஷை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    மாணவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மதுரை-திருச்சி மெயின் ரோட்டில் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் மாணவனுக்கு விஷப்பூச்சி கடித்ததால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக 1 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தேனி அருகே ராணுவத்தில் சேர தந்தை வற்புறுத்தியதால் வி‌ஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி வீரபாண்டி போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 21). கடந்த சில வருடங்களாகவே தந்தை விக்னேஷ்குமாரை ராணுவத்தில் சேர வற்புறுத்தி வந்துள்ளார்.

    இருப்பினும் தனக்கு ராணுவத்தில் சேர விருப்பம் இல்லை என்று தந்தையிடம் பல முறை தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் தனது தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த விக்னேஷ்குமார் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்துக்கு வைக்கும் வி‌ஷ மாத்திரையை தின்று விட்டு பின்னர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த தந்தை கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×