என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police build-up"
- மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
- வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21-ம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்தும் வழக்கை நீக்க கூறியும் இன்று (வியாழக்கிழமை) கோபி செட்டிபாளையம் ஒரு தனியார் கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் இன்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நட த்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபி பஸ் நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்டார்.
மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்கு படுத்தி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் இன்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்து வருகிறது.
- விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்து. இந்த பஸ் வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது வயலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் பஸ்சில் ஏறி சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்செய்தனர்.
இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சின்னவடவாடி கிராம த்தைச் சேர்ந்த மாணவனு க்கும், வயலூரை சேர்ந்த மாண வனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளியில் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வயலூரை சேர்ந்த வாலிபர்கள், பஸ்சில் வந்த மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதுகுறித்து சின்ன வடவாடியை சேர்ந்த பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த்(20), ராஜேஷ்(23), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர்.
- முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தபள்ளி மாணவர்கள் அக்கட வல்லி பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடை ந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை க்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
கடலூர்
விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டு களுக்கு முன் கும்பாபிஷேகம் காரணமாக திருப்பணி தொடங்கியதால், தற்காலிகமாக திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் பாரம்பரிய முறைப்படி, 7 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடக்கும் என கூறினர். ஆனால் அதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக 18 உபயதாரர்களை நியமித்து அவர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தீமிதி திருவிழா நடத்துவதற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்த மின்விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் ஆகி யவற்றை பொருத்திவிட்டு தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் 7 உபயதாரர்கள் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த வசந்தன் தரப்பினர் பூட்டின் மேல் மேலும் பூட்டை போட்டு கோவிலை பூட்டினர். இதனால் இருதப்புக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதுவரை இரு தரப்பினரும் கோவிலை திறக்க கூடாது என போலீசார் கூறினர். இதனை ஏற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், விஜயகுமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.
பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.
இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.
தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்