என் மலர்
நீங்கள் தேடியது "Police case"
- திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50).
இவர்களது மகள் சந்தியா (27). ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தற்போது அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில் இவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சந்தியாவிற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முதலூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
அரிகரசுதன் சென்னை போரூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டம் அடைந்ததால் அரிகரசுதனும், சந்தியாவும் ஊருக்கு வந்து விட்டனர். பின்னர் அரிகரசுதன் உடன்குடி அனல்மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும் அரிகரசுதன், சந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தந்தை, தாய் மற்றும் சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அரிகரசுதன், சத்தியசீலன், ராஜலெட்சுமி, ஜீவஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே புதிதாக ரேஸ்டோபார் பப்பு நடனத்துடன் கூடிய பார் திறக்க புதுவை கலால்துறை அனுமதி வழங்கி இருந்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபாரை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் வந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மதுக்கடை உடைத்து அங்கிருந்த பொருட்களை உருட்டு கட்டையால் அடித்து உடைத்து நொறுக்கினர்.
இதனை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் அமர்ந்து நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனும் போராட்டத்தில் பங்கேற்றார்.
இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடமும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய மதுக்கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலூர்:
கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர் இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
- இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.
- வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள்.
- வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தேவநாதன் இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமணம் முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளை யர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்
கடலூர்:
கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
- தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை
கடலூர்:
சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். குடிக்க் பணம் தர மறுத்தார்,
- பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது இந்துமதி கணவர் பாரதிக்கு மது குடிக்க பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த இந்துமதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
- சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
- வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
- கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி காலணி தெருவைச்சேர்ந்தவர் வேலையன். இவரது மனைவி கிரிஜா (வயது28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வேலையன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம். வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். கிரிஜா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
வேலையன் வீட்டில் இல்லாத நேரத்தில், முருகன், கிரிஜா வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது. இந்நிலையில், கிரிஜா வீட்டில் தூங்கியபோது, விளக்கை அணைத்துவிட்டு, முருகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கிரிஜா சப்தம் போட்டதும், இதை யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுதுவிட்டு முருகன் தப்பியோடிவிட்டார். இது குறித்து, கிரிஜா கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.
- போலீசுக்கு தெரியாமல் மனைவி உடலை எரித்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
- சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சக்தீஸ்வரி (வயது 55). இவர்களின் எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வயல்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணின் பிணத்தை எரித்துள்ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் முருகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.