என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman arrested"

    • பெண் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரத்தை அடுத்த அருவிக்கரை பகுதியை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையில் போலீஸ்காரராக பணிபுரியும் சாபு பணிக்கர் (48) என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அவர் வீட்டில் நான் தனியாக இருந்த போது என்னை ஆபாச படம் எடுத்தார். அதனை காட்டி என்னை அடிக்கடி மிரட்டி வந்தார்.

    பின்னர் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டி வெளியூர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு லாட்ஜில் தங்க வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த 7 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தற்போது நான் அவரின் பேச்சுக்கு உடன்படவில்லை. இதனால் அவர் எனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் கூறியிருந்தார்.

    இதையடுத்து திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ்காரர் சாபு பணிக்கர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குர்ஜாலா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தன. கடைசி நாள் தேர்வு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமியிடம் தாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் நாக பாபு நைசாக பேச்சு கொடுத்தார். சிறுமியை ஏமாற்றி அங்குள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பிடுகுரல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகபாபுவை கைது செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்து மனமுடைந்த நாகபாபுவின் மனைவி அனுஷா விஷம் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவை மீட்டு தாகேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை.
    • போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை அடியோடு ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் போதை பொருள் விற்றது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சமீர், ஆனந்த், ஜேம்ஸ் ஆகிய 3 போலீசார்களை கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் ஜேம்ஸ் என்பவர் தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அருண்பாண்டியன் என்ற போலீஸ்காரரும் நேற்று போதைப்பொருள் விற்ற வழக்கில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் காரில் போதைப்பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், அசாம் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பேகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் அருண்பாண்டியன் தங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தான் அருண்பாண்பாண்டியன் சிக்கி உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அருண் பாண்டியன் வண்ணாரப்பேட்டை போலீஸ்நிலையத்தில் கோர்ட்டு வழக்குகள் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக பாலசுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்து சென்றபோதுதான் போலீஸ்காரர் அருண் பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை போலீஸ்காரர் அருண் பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரியாமல் பாலசுப்பிரமணியனுக்கு விற்றது தெரிந்தது.

    இதுவரை சுமார் 2 கிலோ மெத்தப்பட்டமைனை விற்று ரூ.16 லட்சம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சாய்தீன் அசாம், முசாபீர் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர்.

    புதுச்சேரி, செப்.4-

    ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கலாச்சார விழாபுதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கலாச்சார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் புதுவை வந்துள்ளனர்.

    அதுபோல் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர். கலாச்சார விழா முடிந்த பின்னர் அக்கல்லூரி மாணவி ஒருவர் ஜிப்மர் வளாகத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறல் சத்தம் போட்டார். ஆனால் இதனை அங்கிருந்த காவலாளிகளோ, ஜிப்மர் ஊழியர்களோ கண்டு கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த வாலிபர்கள் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அந்த மாணவி சக மாணவ-மாணவிகளிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காட்டேரிக்குப்பம் அருகே தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணிமுடிந்து தனது உறவினர் சிவக்குமார் (வயது20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கண்ணன் மற்றும் அவரது உறவினர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×