என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்தனர்.

    மேலும், இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல்லம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருத்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரியவந்துள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
    • அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

    கோவை,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்- கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபால புரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்துக் கலவை தெளிக்கப்படுகிறது.

    தமிழகம்- கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.

    • வாலிபர் போக்சோவில் கைது
    • வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி :

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் பொள்ளாச்சி எஸ்.புரவி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கபில்தேவ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம்.

    இந்தநிலையில் கபில்தேவ் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி என்னை கடத்தி சென்றார். பின்னர் மீனாட்சிபுரம் அருகே உள்ள ராமர் பண்ணையில் உள்ள கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருகிறார். இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்த கபில்தேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • 14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தங்க மோதிரம், செயின் உள்பட 9 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் 2 பெண் களும் அங்கு இருந்து தப்பிசென்றனர்.
    • முதியவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து அவரை தாக்கி செயின் பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை துணியால் மூடி தாக்கினர். இதில் நிலைகுலைந்த தேவராஜ் மயங்கினார். அப்போது அந்த இளம்பெண்கள் அவர் அணிந்து இருந்த தங்க மோதிரம், செயின் உள்பட 9 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் 2 பெண் களும் அங்கு இருந்து தப்பிசென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த தேவராஜ் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து முதியவரை தாக்கி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற இளம்பெண்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 இளம்பெண் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்சதேகம் ஏற்பட்டது. 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த முதியவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து அவரை தாக்கி செயின் பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கோட்டூர் மலை யாண்டிபட்டிணத்தை சேர்ந்த பவித்ரா தேவி (26), விஜயலட்சுமி (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது.

    பொள்ளாச்சி,

    பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன.

    இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஓர் ஆண்டுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 22 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும், கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்துக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் அணையிலிருந்து 6 டி.எம்.சி தண்ணீர் வெளியேறியது. மதகு உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரை முருகன் நேரில் ஆய்வு செய்து மதகு உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை அடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய மதகு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.புதிதாக பொருத்தப்பட்டுள்ள மதகு 42 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. இதன் எடை 42 டன் ஆகும்.

    மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மதகு மேலும், கீழும் இயக்கப்பட்டு சங்கிலிகளின் தன்மையும் சோதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேக்குவதற்கு தயாராக மதகு பொருத்தப்பட்டுள்ளது.

    சோதனை ஓட்டத்தி ன்போது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த சில வாரங்களாக 41 அடிக்கும் கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் உயரும் நீர்மட்டம் புதிய மதகில் தடுக்கப்பட்டு தேக்கப்படும்.

    இது குறித்து பி.ஏ.பி அதிகாரிகள் கூறும்போது, மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது என்றனர்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பள்ளிக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிக்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறி விட்டனர்.

    இதனால் பயந்த பெற்றோர் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி தனது காதலனுடன் கோவைக்கு படம் பார்க்க சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவைக்கு வந்து மாணவியை தேடினர். அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் காதலனுடன் சுற்றித்திரிந்த மாணவியை மீட்டனர். பின்னர் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போலீசார் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மாணவியை படத்துக்கு அைழத்து சென்ற வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி,

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதனால் எப்போதுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருகிற 27-ந் பழனி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். தற்போது தைப்பூச திருவிழாவும் வர உள்ளது.

    இதனையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அடுத்த மாதம் 5-ந் தேதி பழனியில் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதனை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நேரத்தில் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி

    திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வாலிபர் அனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகமாகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
    • வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன.

     பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சர கத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.

    தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகிய வற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள பழங்குடியின கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி ன் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக எருமை பாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் மாற்றி அமைக்கப்பட்டும், இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை.

    கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடி யில் புதை வட கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் சாலை வசதிகளை மேம்படு த்தி தர வேண்டும். பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு என வன த்துறை சோதனைச்சா வடி களில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்ப டுகிறது.

    உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்த இலவச பொருட்களான இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து உலாந்தி வனச்சரகர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகரத்தினம் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • போலீசார் இந்திரராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (35). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகரத்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இதனையடுத்து இவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை குளியலறையில் வைத்துவிட்டு நுங்கு விற்பனைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பேரூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடியது கஞ்சபட்டி செட்டியார் காலனியை சேர்ந்த இந்திரராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×