search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Holiday"

    • 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
    • அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.

    மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 13ந்தேதி மட்டும் அதிகபட்கமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464பேர் பயணம் செய்துள்ளனர்.
    • 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்த 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்ச மாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும் திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர்.

    14-ந்தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ந்தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8160 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×