என் மலர்
நீங்கள் தேடியது "Pooja"
- நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
- சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.
- சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மங்கலம் ஊராட்சி நீலிகணபதிபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, சமேத கருடபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை சிறப்புபூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் நீலிகணபதிபாளையம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிபாளையம், வி.ஐ.பி.நகர், மீனாட்சிநகர், ஜீவாநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கருடபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற போது கோவிலின் கோபுரத்தைச் சுற்றி நேற்று கருடன் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் கருடன் சென்றுவிட்டது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஐப்பசி அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
கரூர்:
ஐப்பசி மாத அஷ்டமியை ஒட்டி, கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழுரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் கால பைரவ ருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யபட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே, புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காளபைரவர், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர். குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
- மகா தீபாராதனை நடைபெற்று சம்வத்ராபிஷேகம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு பகவான் நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி முதல் ஆண்டு சம்வத்ராபிஷேகம் நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அர்ச்சகர்கள் சங்கர், செல்லப்பா, சரவணன், ராஜேஷ், மூர்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை நடத்தினர். இரவு முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று சம்வத்ராபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர்(கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர்.
- பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி பூஜைகள் நடைபெற்றது
ஆனைமலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமாங்கல்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து பூக்கள், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 பழங்கள் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி தீபாராதனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணியளிவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம். திருநீறு, நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்க இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் பார்வேடு மண்டபத்தில் நடக்க இருந்த உற்சவத்தை ரத்து செய்து விட்டு நேற்று கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடத்தப்பட்டது.
அதையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைபவ மண்டபத்துக்கு கொண்டு வந்து எழுந்தருள செய்தனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர். உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்த உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
உற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
- கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது.
- விநாயகர்பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப்படும் பாலஸ்தாபன பூஜை நடந்தது.
இந்த பூஜையையொட்டி விநாயகர்பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார மூர்த்திகள், கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது.
பூஜையினை முத்துராமன் பட்டர், கார்த்திக் பட்டர் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
- புகழிமாலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
- வாசனை திரவியங்களால் அபிஷேகம்
கரூர்
வேலாயுதம்பாளையத்தில் பிரசித்த பெற்ற புகழிமழை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி சுவாமிக்கு காவேரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரூ.1.5 கோடி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது
- தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்
கரூர்:
கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, ராச்சாண்டர் திருமலை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை, வாய்க்கால் படித்துறை, நெல் அடிக்கும் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக சுமார் 1.5 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழாவை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், முதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், சேப்பலாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், ராச்சாண்டர்திருமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பால மூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி, நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகரப் பொருளாளர் தமிழரசன்ம ற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற செயலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது
- எம்.எல்.ஏ.மாணிக்கம் தொடங்கிவைத்தார்
கரூர்:
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அய்யர் மலை பகுதியில் சிறிய பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி செயலக கட்டிடம் வேண்டி தலைவர் பாப்பாத்தி பிச்சை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அய்யர்மலை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை 2022- 23ம் ஆண்டிற்கான ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்,
விழாவில் கரூர் மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை, சத்தியமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம், வைகைநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெரியசாமி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், நீலகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நேற்று 2-வது ஆண்டாக ஏகதின வில்வ லட்சார்ச்சனை மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் லட்ச வில்வார்ச்சனை தொடங்கியது.
தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மீண்டும் மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரையிலும் லட்ச வில்வார்ச்சனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு கோவில் அர்ச்சகர்கள் மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
மாலை 6 மணியளவில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்ச வில்வார்ச்சனை பூஜையில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.