search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pooja items"

    • நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
    • நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆயுதபூஜை விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    நாமக்கல்

    நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், பூ, பொரி மற்றும் சுண்டல், வாழை கன்று ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

    ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நாமக்கல்லில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஆரஞ்சு ஒரு கிலோ ரூ.100-க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.170-க்கும் விற்பனையானது. ேமலும் கொய்யாபழம் கிலோ ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.

    பூக்கள் விலை உயர்வு

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.500- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.500- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்செங்கோடு

    இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

    • வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
    • சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.

    மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.

    பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.

    வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.

    எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

    சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.

    மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.

    மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.

    அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

    * வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

    * எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

    * வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

    * எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.

    * அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

    * 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
    • மேலும் குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த மன்னங்கோயில் நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பூஜை செய்து வந்தவர் சூரியமூர்த்தி குருக்கள். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளதோடு கோவில் உபயதாரர்களால் அளிக்கப்பட்ட குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். மேற்படி கோயிலை பூட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சாவியையும் ஒப்படைத்தார்.

    ×