என் மலர்
நீங்கள் தேடியது "Postcards"
- தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட த்தில் தாலுகா வாரியாக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பாலன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனாட்சி நாயக்க ன்பட்டி, செட்டிநாயக்க ன்பட்டி, சின்ன பள்ள ப்பட்டி, முத்தழகுபட்டி, ம.மு. கோவிலூர், பூதிபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோசங்க ளை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கவுரவத்தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.
- போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
பாபநாசம்:
கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிப்பை வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரிலேயாவது அறிவித்திடக்கோரி தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் வர்த்தகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் பாபநாசத்தில் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தி அழைப்பிதழை வழங்கினார்.
பாபநாசம் வணிகர் சங்க தலைவர் குமாரை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
பின்னர் பாபநாசம் நீதிமன்றத்திற்கு சென்று அங்குள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் நேரில் சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தினார் அப்போது போராட்டக் குழு நிர்வாகிகளும் உடன் கலந்து கொண்டனர்.
- 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
- காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
மானாமதுரை:
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், ஓவிய ஆசிரியர். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டியுள்ளார்.
64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தொலை தொடர்பு சாதனமாக அஞ்சல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது படைப்புகளை அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கமும் இருந்து வந்தது.
தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி விட்டது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பு போல் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை.
எனவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.
தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.