search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "potatoes"

    • 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாரிடம் விஜய் வர்மா புகாரளித்தார்.
    • விஜய் வர்மா பேசியதை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உருளைக்கிழங்கு காணவில்லை என்று போலீசாரிடம் விஜய் வர்மா சீரியசாக பேச, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், "என்ன மது அருந்தினீர்கள்?" என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    வடா பாவ் பன் - 10

    உருளைக்கிழங்கு - 4

    மஞ்சள் தூள் - 1 பின்ச்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

    எலுமிச்சை - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கடலை மாவு - 200 கிராம்

    தண்ணீர் - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - பொறிக்க

    பச்சை மிளகாய் - 10

    புதினா சட்னி - தேவையான அளவு

    கார சட்னி - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    • பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.


    • கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும்.

    • ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.

    • நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.

    • அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)

    • வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த பச்சை மிளகாய் வைத்து பரிமாறிவும்.

    • இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    • மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரம் முதல் 2 ஆயிரம் டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து வழக்கமாக 45 டன் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். தற்போது 15 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வரத்து குறைவால் உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1,000-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    கோதுமை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவைக்கு

    ரவை - 1/4 கப்

    தக்காளி - 2 கப்

    வெங்காயம் - 2

    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

    துருவிய சீஸ் - 1 கப்

    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

    வெண்ணெய் - சிறிது

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    ×