என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powercut"

    • கரூரில் நாளை மின்தடை செய்யபடும்
    • காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது

    கரூர்:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புகளூர் துணை மின்நிலைய பகுதிகளான புன்செய் புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, தர்மராஜபுரம், ஓரத்தை, மேட்டுப்பாளையம், நானபரப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (7ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக் காது என கரூர் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை 9.30 மணிமுதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது
    • மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், இந்திராநகர், சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு கீழானூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காக்களூரில் ஏற்பட்ட மின்தடையால் மேலானூர் பகுதிக்கு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு காக்களூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிவிடப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் மேலானூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இரவு நேர மின்தடையால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.

    இதனால் கிராம மக்களின் மறியல் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. இதையடுத்து வெங்கல் போலீசார் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார். இதனால் போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர். மின் சப்ளை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் பழைய வழிதடத்திலேயே மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராமமக்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணவகுத்து நின்றன.

    இதற்கிடையே இன்று காலை 10 மணிவரை அப்பகுதியில் மின் சப்ளை செய்யப்படவில்லை என்று கிராமமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • துவாக்குடி பகுதியில 11ந்தேதி மின் நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக செயற்பொறியாளர் விளக்கம்

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 11ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தான் மேடு, பெல்நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி செக்டார் மற்றும் ஏ, இ, ஆர் மற்றும் பிஎச் செக்டார், என்.ஐ.டி., துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பெய்கைக்குடிஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி நாளை, காலை முதல் மாலை வரை 36 இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • திருச்சி செயற்பொறி அறிவித்து உள்ளார்

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், போசம்பட்டி, கொள்ளாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரண்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூலை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியாவூர, சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிகரும்பூர் ஆகிய 36 இடங்களில் நாளை(11-ந்தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 12-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்:

    பெருமாநல்லூா் துணை மின்நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

    பழங்கரை துணை மின்நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி ,நெசவாளா் காலனி, எம்ஜிஆா்., நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.

    • பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது, என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

    • திருவெறும்பூர் பகுதியில் 28 இடங்களில் மின் தடை
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    திருச்சி, 

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 15ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருணசமுத்திரம், புதுதெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்காவி, கிளியூர், பர்மாகாலனி, கூத்தைபார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரிநகர்ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    ராசாத்தாவலசு துணை மின்நிலையம்: ராசாத்தாவலசு, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின்நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

    தாசவநாயக்கன்பட்டி துணை மின்நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

    ஊதியூா் துணை மின்நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

    • பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    பெரம்பலூர் பராமரிப்பு பணிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர் கிராமியத்துக்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோன்று கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர், தொண்டமாந்துறை பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்கள் ரவிக்குமார் (சிறுவாச்சூர்), செல்வராஜ் (பெரம்பலூர் கிராமியம்), மாலதி (கிருஷ்ணாபுரம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை முதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்நாளை 24-ந்தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், ஆமந்தகடவு, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா் மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×